மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

நல்ல உடல்நலம், மன அமைதியுடன் இருக்கிறேன்: ரஜினி

நல்ல உடல்நலம், மன அமைதியுடன் இருக்கிறேன்: ரஜினி

தனக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும், டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடுவேன் எனக் கூறிவிட்டு ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்தே திரைப்பட படப்பிடிப்புக்குச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த். படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ரஜினிக்கு எடுக்கப்பட்ட சோதனையில் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

எனினும் டிசம்பர் 25ஆம் தேதி சீரற்ற ரத்த அழுத்தம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள் அங்கு சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பிய ரஜினிகாந்தை, ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும், கொரோனா பாதிக்கும் அபாயமுள்ள எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற முடிவெடுத்து அறிவித்தார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவுக்குப் பிறகு ரஜினி பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அப்பல்லோ மருத்துவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவில், “அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நல்ல உடல்நலனோடும், மன அமைதியுடனும் இருக்கிறேன். அப்பல்லோவில் அனைத்தும் சிறப்பாக இருந்தது. இதனை தொடருங்கள். நன்றி” என ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.

இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அப்பல்லோ, “தலைவா நீங்கள் பேசும்போது உலகம் கேட்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரத்திற்கு சேவை செய்ய 2020 எங்களுக்கு வாய்ப்பளித்தது. அவரது கருணை மிக்க வார்த்தைகளுக்கு அப்பல்லோ நன்றி தெரிவிக்கிறது. 2021 ரஜினிக்கு ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் வளமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 1 ஜன 2021