மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

சிறப்பு சட்டமன்றக் கூட்டம்: முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!

சிறப்பு சட்டமன்றக் கூட்டம்: முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!

சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரை நடத்த வேண்டுமென ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 37 நாட்களாக பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள சட்டமன்றத்திலும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதற்கு பாஜகவின் ஒரே சட்டமன்ற உறுப்பினரும் ஆதரவு தெரிவித்தார். தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு அதிமுக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதோடு, விவசாயியாக அந்த சட்டத்தை ஆதரிக்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 1) அனுப்பிய கடிதத்தில், “குறைந்தபட்ச ஆதார விலை இல்லாத, கார்ப்பரேட்டுகளுக்கு, தங்களை நிரந்தர அடிமைகளாக்கும் இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது டெல்லியில் போராடும் விவசாயிகளின் முக்கியமானதும், முதலாவதுமான கோரிக்கையாக இருக்கிறது.

முதன்முதலில் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்து, இலவச மின்சாரம் அளித்த மாநிலம் என்ற முறையில், விவசாயிகளுக்கு மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் தமிழகம், எவ்வித வேறுபாடும் இன்றி ஒன்றிணைந்து, அவர்கள் பக்கம் நின்று, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வலியுறுத்துவது காலத்தின் கட்டாயம்” என்று தெரிவித்துள்ளார்.

தங்களின் உணர்வுகளைத் தமிழ்நாடு சட்டமன்றம் எதிரொலித்து, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்குத் தோளோடு தோள் நின்று துணைபுரிய வேண்டும் என்பது, நம் மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் ஆழ்ந்த விருப்பமாக இருக்கிறது. வரவேற்க வேண்டிய அந்த விருப்பத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதில், பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுதியாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டியதோடு,

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்காக தமிழக சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

வெள்ளி 1 ஜன 2021