மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

சசிகலாவுக்கு எதிராக குற்றம்சாட்டிய ரூபா ஐபிஎஸ் இடமாற்றம்!

சசிகலாவுக்கு எதிராக குற்றம்சாட்டிய ரூபா ஐபிஎஸ் இடமாற்றம்!

கர்நாடக உள் துறைச் செயலாளர் ரூபாவை வேறு துறைக்கு இடமாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 2017 ஜூலை மாதத்தில் சிறையில் சோதனை நடத்தினார் அப்போதைய சிறைத் துறை டிஐஜி ரூபா. இந்த ஆய்வுக்கு பிறகு, சிறையில் தண்டனைக் கைதிகளாக உள்ள சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறையில் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு டிஜிபி சத்யநாராயண ராவ் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதித்துள்ளார் என்று பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ரூபா சிறைத் துறையிலிருந்து போக்குவரத்து பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஐஜியாக பதவி உயர்வு பெற்ற ரூபா, கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் உள் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பெங்களூரு மாநகருக்கான பாதுகாப்பு திட்டத்திற்கான டெண்டர் விவகாரம் தொடர்பாக , ரூபா பெங்களூரு கூடுதல் கமிஷனர் ஹேமந்த் நிம்பல்கர் ஆகியோரிடையே மோதல் வெடித்தது. டெண்டர் குழுவின் தலைவரான நிம்பல்கர், ஒரு குழுவுக்கு ஆதரவாக செயல்பட்டு விதிகளை மீறுவதாக ரூபா குற்றம்சாட்டினார். மறுபுறம் நிம்பல்கர், எந்தவொரு அதிகாரமும் இல்லாமல் உள்துறை செயலாளர் ரூபா இந்த செயலில் தலையிடுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் உள் துறைச் செயலாளரான ஐ.ஜி ரூபா, கர்நாடக மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். கூடுதல் கமிஷனராக (நிர்வாகப் பிரிவு) இருந்த ஐ.ஜி நிம்பல்கர், பெங்களூரு உள் பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை கர்நாடக தலைமைச் செயலாளர் விஜய பாஸ்கர் நேற்று பிறப்பித்தார்.

சசிகலா முன்கூட்டியே விடுதலையாக முடியாது என உள் துறைச் செயலாளராக இருந்த ரூபா கூறிவந்தார். தற்போது அவரை உள் துறையிலிருந்து மாற்றம் செய்துள்ளது சசிகலா தரப்பினருக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வெள்ளி 1 ஜன 2021