மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

டிஜிட்டல் திண்ணை: வைகோ கேட்ட சீட்... ஸ்டாலின் சொன்ன பதில்!

டிஜிட்டல் திண்ணை: வைகோ கேட்ட சீட்... ஸ்டாலின் சொன்ன பதில்!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.

"2021 ஆம் ஆண்டு பிறந்து விட்டது அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்ற வாழ்த்து செய்தியை அனுப்பிய வாட்ஸ்அப் அடுத்தது அரசியல் பக்கம் திரும்பியது.

"2021 ஆம் ஆண்டு தமிழக மக்களுக்கு மிக முக்கியமான ஆண்டு. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்படுகிறது. இதை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி விட்டன.

கடந்த சில நாட்களாகவே அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா இல்லையா.... அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக ஏற்கிறதா இல்லையா என்ற கேள்விகள் பரபரப்பாக எழுந்து வருகின்றன.

அதேநேரம் தேர்தல் பரப்புரையின் போது செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... "தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தான் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். திமுகவில் கூட்டணி பேச்சுகளை ஆரம்பித்து விட்டார்களா என்ன?’ என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனாலும் திமுகவில் , அதிமுகவில் வெளிப்படையாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொகுதிப் பங்கீடுகள் நடைபெறாவிட்டாலும் பூர்வாங்கமாக அவை தொடங்கிவிட்டன.

கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் சந்தித்துப் பேசினார். மதிமுக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியையும் வைகோவுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதியையும் திமுக கூட்டணியில் பெற்றது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நடந்த மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அரசியல் ஆய்வு மைய குழு கூட்டங்களில் வைகோ பேசும்போது..."திமுக கூட்டணியில் நாம் கௌரவமாக நடத்தப் படுகிறோம். எனவே நமது சக்திக்கு ஏற்றது போல உரிய தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். ஸ்டாலின் குறிப்பாக என்னிடம் மரியாதையோடு நடந்து கொள்கிறார்" என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அடிப்படையில் டிசம்பர் 26ஆம் தேதி அறிவாலயம் சென்ற வைகோவை ஸ்டாலின் இன்முகத்தோடு வரவேற்று இருக்கிறார். தற்போதைய அரசியல் பற்றி கொஞ்சநேரம் விவாதித்த இருவரும் அடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் விஷயத்திற்கு வந்தனர்.

"வருகிற தேர்தலில் நாம் பிரம்மாண்ட வெற்றி பெறுவோம். செல்லும் இடங்களிலெல்லாம் அது தெரிகிறது. அந்த வகையில் மதிமுகவுக்கு கூட்டணியில் 20 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும். நிறைய பேர் போட்டியிட வேண்டும் என்று ஆவலாக இருக்கிறார்கள். ஆவலோடு மட்டுமல்ல வெற்றிபெறும் முனைப்போடும் இருக்கிறார்கள்' என்று வைகோ சொல்ல அதை ஸ்டாலின் கொஞ்ச நேரம் மௌனமாகக் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார். வைகோ இருபது, அல்லது இருபதுக்கும் குறையாத இடங்கள்தான் தங்களுக்கு நன்றாக இருக்கும் என்றும் அழுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறார். “மத்த தலைவர்கள்கிட்டயும் பேசிட்டு சொல்றேன்” என்று பதில் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின்.

சந்திப்பு முடிந்து வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம்..."சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். இதற்காக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஸ்டாலினிடம் தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை. விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்குவேன் என்று தெரிவித்தார்.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

வெள்ளி 1 ஜன 2021