டிஎன்பிஎஸ்சி முற்றுகை: பாமகவினைத் தேடித் தேடி கைது செய்யும் போலீஸ்

politics

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தபடி, வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு டிஎன்பிஎஸ்சி அலுவலகம் எதிரில் இன்று (டிசம்பர் 1) ஆர்ப்பாட்டம் நடத்துகிறது பாமக. . டிசம்பர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் இந்த ஆர்பாட்டம் ஐந்து நாட்கள் தொடர்ந்து நடக்கிறது

வெளியில் ஆர்ப்பாட்டம் என்று சொன்னாலும், அதிகமான கூட்டத்தைக் கூட்டி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்துள்ளது பாமக தலைமை. முதல் நாள் போராட்டத்தில் இளைஞர் அணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி கலந்துகொள்கிறார்கள்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 50 நிர்வாகிகள் இருக்கிறார்கள் இவர்கள் அனைவரும் தலா ஒரு கார் எடுத்து வரவேண்டும். அவர்கள் குறைந்தது ஐந்து பேரை அழைத்து வரவேண்டும். இது தவிர ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய மாவட்ட கவுன்சிலர்கள், ஆட்களை அழைத்து வரவேண்டும் என பாமக தலைமை உத்தரவிட்டுள்ளது. .

உதாரணமாக கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. ஒரு தொகுதிக்கு 50 கார், மாவட்டத்தில் 450 கார், என கணக்கு போட்டிருக்கிறார்கள். மாவட்டத்துக்கு சராசரி இரண்டாயிரம் பேர் என்றால்கூட 15 மாவட்டங்களிலிருந்து 30 ஆயிரம் பேர் வருவார்கள் என்ற திட்டம் போட்டுள்ளார் அன்புமணி. போலீஸ் தடுத்தால் அதை மீறி எப்படி வரவேண்டும் என்ற ரகசிய திட்டங்களையும் வகுத்து கொடுத்துள்ளார்கள்.

பாமகவின் வியூகம் இப்படியென்றால், அதைத்தடுக்க போலீஸும் சில வியூகங்களை வகுத்தது.

சென்னைக்குள் பாமக கூட்டம் வராதபடி அந்தந்த மாவட்டங்களில் தடுத்து நிறுத்தி கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது..இதையடுத்து நேற்று இரவு முதல் தடுப்பு பணிகளில் இறங்கி விட்டது போலீஸ்.

இதை மோப்பம் பிடித்த பாமக தலைமை முக்கிய நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு நேற்று மாலையே புறப்பட்டு சென்னையில் வந்து தங்கும் படியும், பேருந்தில் வந்தால் தடுக்கமாட்டார்கள், அதனால் அதிகாலையில் பேருந்தில் புறப்பட்டு வந்துவிடுங்கள், குறிப்பாக காரில் வருபவர்கள் கொடிகட்டி போலீஸிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

பாமக முக்கிய நிர்வாகிகளின் கம்யூனிகேஷன்களை கண்காணித்த உளவுத்துறை அதிகாரிகள் நேற்று இரவு 9.00 மணிக்கு அலார்ட செய்ததால், இரவு முழுவதும் சாலையில் நின்றுகொண்டு வாகன சோதனைகள் நடத்தி கைதுசெய்து வருகிறார்கள் வட மாவட்டங்களில். சென்னை போலிஸார் லாட்ஜ்களில் ரெய்டு செய்து பாமகவினரை தேடித்தேடி கைது செய்து வருகின்றனர்.

போலீஸ் நெருக்கடிகளை மீறி பல்லாயிரம் தொண்டர்களைத் திரட்டி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சென்னையை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது பாமக தலைமை.

ஆனால் அவர்கள் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று போலிஸ் முன்னேச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக சொல்கிறார்கள் காவல் துறையினர்

**-வணங்காமுடி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *