மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

‘கட்சியே வேண்டாம்’: தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம்!

‘கட்சியே வேண்டாம்’: தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம்!

தேர்தல் ஆணையத்துக்கு விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார்.

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் கடந்த 5ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது. மாநிலத் தலைவர் பதவியில் பத்மநாபனும், பொதுச் செயலாளர் என்ற இடத்தில் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் பெயரும், பொருளாளர் என்ற இடத்தில் தாயார் ஷோபா பெயரும் இடம்பெற்றிருந்தது.

இதனால் விஜய் கட்சி ஆரம்பித்ததாக தகவல் பரவியது. கட்சிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என மறுத்த விஜய், தனது பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். அடுத்த நாளே தனக்கு தெரியாமல் கட்சி ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறி பொருளாளர் ஷோபா பதவியை ராஜினாமா செய்து, கட்சியிலிருந்து விலகினார். சில நாட்களுக்கு முன்பு தலைவர் பத்மநாபனும் விலகினார்.

இந்த நிலையில் கட்சியே வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அனுப்பிய இ-மெயில் கடிதத்தில், “அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய வேண்டாம்” என வலியுறுத்தியுள்ளார். கட்சி ஆரம்பித்த சில நாட்களிலே தலைவர், பொருளாளர் விலகியதாலும், பெயரைப் பயன்படுத்தக் கூடாது என விஜய் எச்சரிக்கை விடுத்ததாலும் இந்த முடிவை எஸ்.ஏ.சி எடுக்க நேரிட்டதாகக் கூறுகிறார்கள் விஜய் ரசிகர்கள் வட்டாரத்தில்.

எழில்

ஞாயிறு, 22 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon