சூரப்பா, அரியர் தேர்ச்சி: அமித் ஷாவை சந்தித்த கே.பி.அன்பழகன்

politics

உள் துறை அமைச்சர் அமித் ஷாவை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேரில் சந்தித்துப் பேசினார்.

இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்த மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, அரசு ரீதியிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன், பாஜக நிர்வாகிகளுடன் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் சென்னை எம்.ஆர்.சி நகரிலுள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்த அமித் ஷாவை, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று (நவம்பர் 22) நேரில் சந்தித்துப் பேசினார். உயர்கல்வி விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் பல்வேறு முரண்பாடுகள் உள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. ஏற்கனவே சூரப்பா தொடர்பாக ஆளுநரிடம் அரசு தரப்பில் புகார் சொல்லப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால்தான் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இன்றைய சந்திப்பில் சூரப்பாவிற்கு எதிராக ஆணையம் அமைக்கப்பட்டது தொடர்பாக அமித் ஷாவிடம் விளக்கிய அன்பழகன், அவர் மீது புகார்களையும் அடுக்கியிருக்கிறார் என்கிறார்கள் உயர் கல்வி வட்டாரங்களில்.

அத்துடன், தமிழகத்தில் அரியர் மாணவர்களை தேர்ச்சி பெறவைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டதற்கு மத்திய அரசின் கீழ் வரும் யுஜிசி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆதரவு தர வேண்டுமெனவும், உயர்கல்வி துறை சம்பந்தமான இன்னும் சில விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்கள்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *