மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 நவ 2020

தமிழக சட்டமன்றத்தில் பாஜக: அமித் ஷாவின் உத்தரவு!

தமிழக சட்டமன்றத்தில்  பாஜக: அமித் ஷாவின் உத்தரவு!

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முதன்மைத் தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா நேற்று (நவம்பர் 21) சென்னையில் அரசு விழாக்கள், முதல்வர், துணை முதல்வர்கள் சந்திப்பு ஆகியற்றை அடுத்து லீலா பேலஸ் ஹோட்டலில் தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதில் அமித் ஷாவுடன், தேசிய பாஜக பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி, தமிழக பாஜக தலைவர் முருகன், பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் வரவேற்புக்குப் பின் முதலில் பேசினார் தமிழக பாஜக தலைவர் எல். முருகன்.

“இன்றைக்கு தமிழக அரசியலில் பாஜக ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. மாற்றுக்கட்சியினர், பெண்கள் தொழிலதிபர்கள், கலைத் துறையினர், ஐ.பிஎஸ், அதிகாரிகள் என பலர் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இளைஞர்கள் நம்மை நோக்கித்தான் வந்துகொண்டிருக்கிறார்கள். மோடியின் ஊழலற்ற ஆட்சி தமிழகத்திலும் வேண்டும் என்று நம்மை நோக்கி இளைஞர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று வரை வெளியே வரவில்லை. ஆனால் பாஜக தொண்டர்கள் தமிழகம் முழுக்க களமிறங்கி மக்களுக்கு சேவை செய்துகொண்டிருக்கிறோம்.

திமுக நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள். ஸ்டாலின் நவீன தீண்டாமையை கடைபிடிப்பது ஏன்? விவசாயிகளின் தோழனாக பாஜக இருக்கிறது. கந்த சஷ்டி கூட்டத்தை இழிவுபடுத்துபவர்கள் பின்னால் திமுக நிற்கிறது. இதை விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் வேல் யாத்திரைதான் நடத்துகிறோம் வேல் யாத்திரை அவசியமா என்று சிலர் கேட்கிறார்கள். அத்தியாவசியம் என்று சொல்வேன் நான்.

இருக்கிற நாட்கள் மிகக் குறைவு. நாம் செய்ய வேண்டிய பணிகள் அதிகம். நம் பூத்களை வலிமைப்படுத்த வேண்டும். வருகிற தேர்தலுக்குப் பின் நம்முடைய எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் இருப்பார்கள். அதிகப்படியான எம்.எல்.ஏ.க்களை அமித் ஷாவிடம், ஜேபி. நட்டாவிடமும் ஒப்படைப்போம்” என்று பேசினார் முருகன்.

அமித் ஷா இந்தக் கூட்டத்தில் வழங்கிய ஆலோசனைகளில் முக்கியமானதாக தமிழக சட்டமன்றத்தில் நேரடியான பாஜக உறுப்பினர்கள் இடம்பெறுவது பற்றித்தான் இருந்துளது. பூத் கமிட்டிகள் பற்றிய விவரங்களை எல்லாம் கேட்டறிந்த அமித் ஷா, தமிழகத்தில் பாஜக வெற்றிபெறும் வாய்ப்புள்ள தொகுதிகள் பற்றியும் ஆலோசித்திருக்கிறார்.

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

ஞாயிறு 22 நவ 2020