மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 நவ 2020

இன்று அமித்ஷா தமிழகம் வருகை: சந்திப்பவர்கள் யார் யார்?

இன்று அமித்ஷா தமிழகம் வருகை: சந்திப்பவர்கள் யார் யார்?

மத்திய உள் துறை அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவருமான அமித் ஷா இன்று (நவம்பர் 21) தமிழகம் வருகை தந்து அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். திருவள்ளூா் மாவட்டம் தோ்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் உள்பட ரூ.67 ஆயிரத்து 378 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டுகிறார்.

இதற்கான விழா சென்னை கலைவாணா் அரங்கத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. விழாவுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகிக்கிறாா். துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.

இதற்காக இன்று பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அமித் ஷா, கத்திப்பாரா, கிண்டி, ஆளுநர் மாளிகை, அடையார் வழியாக லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலை அடைகிறார். அங்கிருந்து மதிய உணவை முடித்துவிட்டு பாஜகவின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கிறார். பிறகு மாலை 4.25க்கு கலைவாணர் அரங்கிற்கு செல்கிறார்.

அங்கு நடக்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின்னர், மாலை 6.15 மணிக்கு மீண்டும் லீலா பேலஸ் வருகிறார். அந்த ஹோட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அமித் ஷா, மறுநாள் காலை 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு விமான நிலையம் செல்கிறார்.

விமான நிலையம் முதல் லீலா பேலஸ் வரை அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜகவினர் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அமித் ஷா வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் 7,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தை அமித் ஷா சந்திக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவர அதனை மறுத்துள்ளார் தமிழக பாஜக பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலாளருமான சி.டி.ரவி. புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த ரவி, “அமித் ஷா வருகையின்போது கூட்டணி குறித்து பேசுவார்களா என்பது தற்போதைக்குத் தெரியாது. அமித் ஷா எங்கெல்லாம் செல்வாரோ அங்கெல்லாம் வெற்றியை நிலைநாட்டுவார்” என்றும் கூறியுள்ளார்.

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட விவசாய அணிச் செயலாளர் கே.பி.ராமலிங்கம், அமித் ஷாவை சந்திக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமித் ஷா முன்னிலையில் பலரும் பாஜகவில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது.

முதல்வர் வேட்பாளரை மாற்றினால்...- டிடிவி தினகரனின் டீல்!

4 நிமிட வாசிப்பு

முதல்வர் வேட்பாளரை மாற்றினால்...- டிடிவி தினகரனின் டீல்!

சிறுத்தைகளுக்கு ஐந்து? திமுக கூட்டணியில் அடுத்த கையெழுத்து! ...

3 நிமிட வாசிப்பு

சிறுத்தைகளுக்கு  ஐந்து?  திமுக கூட்டணியில் அடுத்த கையெழுத்து!

பாமகவுக்கு 23 தொகுதிகள் கிடைத்தது எப்படி?- எங்களுக்கும் ஒரு ராமதாஸ் ...

8 நிமிட வாசிப்பு

பாமகவுக்கு 23 தொகுதிகள் கிடைத்தது எப்படி?- எங்களுக்கும் ஒரு ராமதாஸ் கிடைப்பாரா?

சனி 21 நவ 2020