மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 நவ 2020

மாணவர்கள்-பெண்கள்: டார்கெட் எடப்பாடி

மாணவர்கள்-பெண்கள்: டார்கெட் எடப்பாடி

அதிமுகவின் தேர்தல் பணிகளின் அடுத்த கட்டமாக, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 20 ஆம் தேதி மாலை சென்னை அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்றது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வர் வேட்பாளருமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நேற்று திமுகவின் பிரச்சாரம் துவக்கம், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை போன்ற அரசியல் சூழல்களுக்கிடையே அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பில் பிரச்சினைகள் இருந்தால் அதை சரி செய்வது, கூட்டணி அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அம்மா இல்லாமல் நாம் தேர்தலை சந்தித்தாலும் அம்மா அரசின் மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். இந்த தேர்தலில் நமது ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுவோம். குறிப்பாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதகிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்து அரசுப் பள்ளி மாணவர்களை மருத்துவர்களாக்கியிருக்கிறோம். இந்த சாதனையை போல அரசின் குடிமராமத்து திட்டம், நீர் திட்டங்கள் என்று மக்களிடம் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லுவோம். மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்று நமக்கு நம்பிக்கையிருக்கிறது. மாணவர்கள், பெண்கள் இந்த இருவரையும் நாம் சென்று சேர வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் பாசறை கூட்டத்தை நடத்தி அடுத்து பெண்கள் மத்தியில் நமது பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஓ.பன்னீர் செல்வம், “அனைவரும் ஒற்றுமையாய் இருந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்” என்று பேசியிருக்கிறார்.

டிஜிட்டல் திண்ணை: நள்ளிரவில் அமித் ஷா ஒதுக்கிய 2 மணி நேரம்... நடந்தது ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: நள்ளிரவில் அமித் ஷா ஒதுக்கிய 2 மணி நேரம்... நடந்தது என்ன?

திமுக அணியில் இருந்து விலகல்: பாரிவேந்தரின் எம்பி. பதவி என்னாகும்? ...

8 நிமிட வாசிப்பு

திமுக அணியில் இருந்து விலகல்: பாரிவேந்தரின் எம்பி. பதவி என்னாகும்?

டிஜிட்டல் திண்ணை: பிரேமலதா இல்லாமல் விஜயகாந்தைச் சந்தித்த அமைச்சர்கள் ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: பிரேமலதா இல்லாமல் விஜயகாந்தைச் சந்தித்த அமைச்சர்கள் - பின்னணி என்ன?

சனி 21 நவ 2020