மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 நவ 2020

குடும்ப அரசியலுக்கு தமிழகத்திலும் முடிவுகட்டுவோம்: அமித் ஷா

குடும்ப அரசியலுக்கு தமிழகத்திலும் முடிவுகட்டுவோம்:  அமித் ஷா

சென்னை கலைவாணர் அரங்கத்தில் அரசுத் திட்டங்களை இன்று (நவம்பர் 21) துவக்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக அரசையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரையும் வெகுவாகப் பாராட்டினார்.

“மூத்த மொழியான தமிழில் பேச முடியாமைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று இந்தியில் பேச்சைத் தொடங்கினார் அமித் ஷா.

மத்திய மோடி அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பற்றி விரிவாகப் பேசிய அமித் ஷா ஒரு கட்டத்தில், ‘நான் கொஞ்சம் அரசியல் பேச ஆசைப்படுகிறேன்” என்று அரசு விழாவில் வெளிப்படையாகவே அரசியல் பேசினார்.

“மத்தியிலே மோடி ஆட்சி அமைந்த பிறகு மூன்று முக்கிய வாதங்கள் ஒழிக்கப்பட்டிருக்கின்றன. பரம்பரை வாதம், ஊழல்வாதம், சாதிய வாதம் ஆகிய மூன்று வாதங்கள் மோடியின் ஆட்சியில் இல்லை. இந்தியா முழுதும் இப்போது குடும்ப அரசியலுக்கு நாம் தக்க பாடத்தைப் புகட்டி வருகிறோம். அதே பாடம் தமிழகத்தில் குடும்ப அரசியலைப் பின்பற்றும் கட்சிகளுக்கு புகட்டப்படும்.

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்பது போல சிலர் பேசி வருகிறார்கள். நான் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். திமுக காங்கிரஸ் கூட்டணி பத்து வருடமாக ஆட்சியில் இருந்தீர்களே. நீங்கள் தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள் என்று பட்டியல் போடுங்கள். நான் நாற்சந்தியில் நின்றுகொண்டு மத்திய அரசு தமிழகத்துக்கு செய்த நன்மைகளை பட்டியல் போட தயாராக இருக்கிறேன்.

திமுக காங்கிரஸ் கூட்டணி ஊழலைப் பற்றி பேசுகிறது. நான் கேட்கிறேன்...ஊழலை பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? 2ஜி உள்ளிட்ட கோடிக்கணக்கான ஊழல்களை செய்தவர்கள் நீங்கள். அடுத்தவரை குறை சொல்லும் முன் உங்களை உங்கள் குடும்பத்தினரைத் திரும்பப் பாருங்கள்”என்ற அமித் ஷா,

“தமிழக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இதுவரை 4,400 கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மக்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக தோளோடு தோள் நிற்கும்” என்று உறுதி கூறினார்.

மேலும் அவர், “பிரதமர் மோடி இலங்கை சென்றபோது இலங்கைத் தமிழர்களின் பகுதியான யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். இலங்கைத் தமிழர்கள் மீது மிகுந்த பரிவு கொண்டிருக்கிறார் மோடி. யாழ்ப்பாணம் சென்ற போது அவர்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டியிருக்கிறார்” என்று குறிப்பிட்டார் அமித் ஷா.

-வேந்தன்

முதல்வர் வேட்பாளரை மாற்றினால்...- டிடிவி தினகரனின் டீல்!

4 நிமிட வாசிப்பு

முதல்வர் வேட்பாளரை மாற்றினால்...- டிடிவி தினகரனின் டீல்!

சிறுத்தைகளுக்கு ஐந்து? திமுக கூட்டணியில் அடுத்த கையெழுத்து! ...

3 நிமிட வாசிப்பு

சிறுத்தைகளுக்கு  ஐந்து?  திமுக கூட்டணியில் அடுத்த கையெழுத்து!

பாமகவுக்கு 23 தொகுதிகள் கிடைத்தது எப்படி?- எங்களுக்கும் ஒரு ராமதாஸ் ...

8 நிமிட வாசிப்பு

பாமகவுக்கு 23 தொகுதிகள் கிடைத்தது எப்படி?- எங்களுக்கும் ஒரு ராமதாஸ் கிடைப்பாரா?

சனி 21 நவ 2020