திமுகவைக் கண்டித்து அதிமுகவின் பதில் போராட்டம்!

politics

~திமுகவினரைக் கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலினையும், பொதுச் செயலாளர் துரைமுருகனையும் இழிவுபடுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்களைக் கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் நேற்று கோவையில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி, பெயரை போட்டு கூட போஸ்டர் அடிக்க தைரியமில்லாதவர்கள் அதிமுகவினர். இதை விட அசிங்கமாகவும் சிறப்பாகவும் எங்களுக்கும் போஸ்டர் அடிக்க தெரியும். அடுத்த முறை போஸ்டர்கள் ஒட்டினால் கிழிக்க மாட்டோம். அதன் மீதே வேறு போஸ்டர் ஒட்டுவோம்” என்று தெரிவித்தார்.

மேலும், போஸ்டர் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை இல்லை எனில் அடுத்த முறை குனியமுத்தூர் காவல் நிலையம் முன்பாக போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தார். இந்த நிலையில் திமுகவுக்கு எதிராக ஆளுங்கட்சியான அதிமுகவே பதில் போராட்டத்தை அறிவித்திருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரையும், கோவை மாவட்டத்தில் தொலைநோக்கு பார்வையோடு 50 ஆண்டுகளில் செய்யாத சாதனைத் திட்டங்களை வழங்கிய அமைச்சர் வேலுமணியையும் கற்பனையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவதூறு பரப்பும் செயலில் ஈடுபடும் திமுகவினரைக் கண்டித்து கோவை மக்களை ஒன்றுதிரட்டி கறுப்பு சட்டை அணிந்து கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டமானது கோவையில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *