aசூரரைப் போற்று: ஒரே நாளில் மாறிய கதை!

politics

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் தான், கொரோனா காலத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தக்க வைத்துக்கொண்ட ஒரே திரைப்படம். OTT ரிலீஸ், தியேட்டர் உரிமையாளர்களின் எதிர்ப்பு என எதிர்பார்ப்பை எகிற வைத்த இந்தத் திரைப்படம், கடைசியில் இந்திய விமானப் படையிடம் வாங்க வேண்டிய அனுமதியில் வந்து நின்றது. இந்திய விமானப் படையின் அனுமதி இல்லாமல் இந்தத் திரைப்படத்தை வெளியிடுவது என்பது தேச துரோகக் குற்றமாக மாறக்கூடிய அளவுக்கு பெரிய பிரச்சினை என்பதால், விமானப் படையினரின் போக்கிலேயே அனுமதி பெறுவதென முடிவெடுத்து, படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று அறிவித்தார் சூர்யா. இந்த அறிவிப்பு வெளியான ஒரே நாளில், படம் எந்தத் தடையுமில்லாமல் ரிலீஸாகுமென மீண்டுமொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

கொரோனா கால கட்ட நெருக்கடிகளைத் தாண்டி, எங்கள் படத்துக்கு அனுமதி கொடுங்கள் என்று அழுத்தம் கொடுப்பதை விரும்பாமல் தான், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனாலும் பரவாயில்லை என்ற முடிவினை எடுத்தது படக்குழு. தங்களது முடிவினையே கடிதமாகவும் இந்திய விமானப் படைக்கு அனுப்பிவிட்டு, ரசிகர்களுக்கும் பட ரிலீஸ் தள்ளிப்போவதை அறிவித்தனர். இந்த அறிவிப்புகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு முடிவடைவதற்குள்ளாகவே, “சூரரைப் போற்று திரைப்படத்துக்குத் தேவையான அனுமதி கிடைத்துவிட்டது’ என்று சூர்யா வீடியோ மூலம் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார்.

The wait is over! Trailer out on Oct 26, 10 AM ✈️
Here’s the premiere link, set your reminder!https://t.co/lT6tUzrwnC#SooraraiPottruOnPrime @PrimeVideoIN #SudhaKongara @gvprakash @Aparnabala2@nikethbommi @deepakbhojraj @2D_ENTPVTLTD @rajsekarpandian @guneetm @SonyMusicSouth pic.twitter.com/xHrfdW1cYB

— Suriya Sivakumar (@Suriya_offl) October 24, 2020

ஒரு காகித விமானத்தை வடிவமைத்துக்கொண்டே அந்த வீடியோவில் பேசும் சூர்யா, ஷூட்டிங் நடைபெற்ற காலம் முதல் இப்போது வரை உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி கூறினார். அத்துடன், சூரரைப் போற்று படத்தின் டிரெய்லர் அக்டோபர் 26ஆம் தேதி வெளியிடப்படும் என்ற அறிவிப்பினையும் வெளியிட்டிருக்கிறார். ஒரே நாளில் இப்படி எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டதால் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் ஒருங்கே அனுபவித்து வருகின்றனர் படக்குழுவினர். நீண்ட நாட்களாகியும் அனுமதி கிடைக்காமல் இருந்ததால், நீதிமன்றத்துக்குப் போகாமல் இந்திய விமானப்படையின் கடமைகளை முன்னிறுத்தி எங்கள் வேலைகளை தள்ளிப்போட்டுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தது தான் இப்படியொரு அனுமதி கிடைக்க வழி செய்திருக்கிறது என்கின்றனர் படக்குழுவினர்.

-முத்து-�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *