போயஸ் கார்டன் புதிய பங்களா: தை மாதத்தில் பால் காய்ச்சும் சசிகலா

politics

போயஸ் கார்டனில், சசிகலாவுக்காக புதிய இல்லத்தைக் கட்டிவரும் பணி வேகவேகமாக முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வரும் சசிகலா, தற்போது ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரிலேயே பெரிய அளவில் ஒரு பங்களாவை கட்டி வருகிறார். ஜெ.வின் இல்லம் அரசு இல்லமாக அறிவிக்கப்பட்டு அது சொந்தபந்தங்களின் சொத்துரிமை சர்ச்சையில் சிக்கியிருக்கும் நிலையில் சசிகலாவுக்காக, கடந்த ஆண்டே இந்த புதிய இடத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன. அந்த வேலைகளை டிடிவி தினகரன் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சசிகலா சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்ததில் போயஸ் கார்டனில் புதியதாக கட்டப்பட்டு வரும் பங்களாவும் அடக்கம். கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருந்த அந்த பங்களா வாசலில் முடக்கத்துக்கான அறிவிப்பை ஒட்டிவிட்டுப் போனார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.

இந்நிலையில் அங்கே கட்டுமான பணிகள் தொடர்கின்றன. இதுகுறித்து நாம் அமமுக வட்டாரத்தில் விசாரித்தபோது,

“இது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனைகள் செய்தார் தினகரன். முடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களை விற்கமுடியாது, வாங்க முடியாது. ஆனால் சட்ட ரீதியாக முடக்கத்தை நீக்கும் வரையில் அந்த சொத்துக்களை அனுபவித்து வரலாம். கட்டுமான பணிகளைச் செய்யலாம் என்று சொல்லப்பட்ட நிலையில்தான், போயஸ் கார்டனில் கட்டப்பட்டுவரும் கட்டுமான பணிகள் வேகமெடுத்துவருகிறது.

சில நாட்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகளைக் கவனித்துவரும் ஒப்பந்ததாரரைத் தொடர்புகொண்ட தினகரன் இன்னும் இரு மாதங்களுக்குள் அனைத்து பணிகளையும் முழுமையாக முடித்துவிட்டு ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் தை மாதத்தில் சசிகலா போயஸ் கார்டனின் புதிய பங்களாவில் பால் காய்ச்சலாம்” என்கிறார்கள்.

**-வணங்காமுடி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *