மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 அக் 2020

ரஜினியுடன் கூட்டணி: அமித் ஷா பதில்!

ரஜினியுடன் கூட்டணி: அமித் ஷா பதில்!

ரஜினியுடனான கூட்டணி தொடர்பான கேள்விக்கு அமித் ஷா பதிலளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, அதன் பிறகு வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவந்தார். இந்த நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல மாதங்கள் கழித்து அமித் ஷா, நியூஸ் 18 ஆங்கில தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்துள்ளார்.

அமித் ஷாவின் சொந்த ஊரான அகமதாபாத்தில் நடைபெற்ற கிட்டத்தட்ட ஒரு மணி நேர விரிவான உரையாடலில், பீகார் தேர்தல்களுக்கு அப்பாற்பட்ட பல விஷயங்களைப் பற்றி விவாதித்தார். சீனாவின் எல்லையில் உள்ள பதற்றங்கள் முதல் காஷ்மீர் வரையும், வேளாண் சட்டங்கள் தொடர்பான போராட்டங்கள் பற்றியும் பதிலளித்தார்.

கடந்த சில மாதங்களாக உங்களது உடல்நிலை குறித்து செய்திகள் வந்துகொண்டிருந்தன. இப்போது எப்படி இருக்கிறீர்கள் என நியூஸ் 18 ஆசிரியர் ராகுல் ஜோஷி கேள்வி எழுப்பினார். அதற்கு, “என்னுடைய உடல்நலம் நன்றாகவே இருக்கிறது. நான் உடல் உறுதியோடு இருந்து எனது அனைத்து கடமைகளையும் நிறைவேற்றிவருகிறேன்” என்றார்.

தமிழகத்தில் பாஜக தீவிர கவனம் செலுத்தும் நிலையில், எதிர் வரும் தேர்தல்களைச் சந்திக்க ரஜினிகாந்துடன் கைகோர்ப்பீர்களா கேள்வி எழுப்ப, “கூட்டணி தொடர்பாக நாங்கள் முடிவு எடுப்பதற்கு இன்னும் சிறிது காலம் உள்ளது. அத்துடன் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்று பதிலளித்தார் அமித் ஷா.

தமிழகத்தில் பாஜக சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. ரஜினிகாந்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா என்று கேட்க, “ஆம், நாங்கள் எங்கள் கட்சியை பலப்படுத்த வேண்டியிருப்பதால் தொடர்ந்து மாற்றங்களைக் கொண்டு வருகிறோம். அதிமுகவுடன் கூட்டணியில் இரண்டு தேர்தல்களைச் சந்தித்துள்ளோம்” என்று கூறினார்.

ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாகக் கூறிய பிறகு பல்வேறு விவகாரங்களில் அவருடைய கருத்துக்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்கும் விதமாகவே இருந்தன. அவர் பாஜகவில் இணைய வேண்டுமென தமிழக பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் மோடியையும், அமித் ஷாவை கிருஷ்ணன், அர்ஜுனன் என்று ரஜினிகாந்த் புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

திங்கள் 19 அக் 2020