மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 அக் 2020

விவசாயிகள் சங்கமம் தடுத்து நிறுத்தம்: அழகிரி கைது!

விவசாயிகள் சங்கமம் தடுத்து நிறுத்தம்: அழகிரி கைது!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் சங்கமத்தைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் விவசாயிகள் சங்கமத்தை இன்று (அக்டோபர் 19) ஏற்பாடு செய்திருந்தனர் தமிழக காங்கிரஸ் கட்சியினர். போடி சாலையில் உள்ள ரேணுகா மில் கிரவுண்டில் நடக்க இருந்த இந்த கூட்டத்துக்காக நேற்று இரவே வந்துவிட்டார் அழகிரி. ஆனால் கூட்டத்துக்கு தடை போடும் முயற்சிகளில் நேற்றே இறங்கிவிட்டது தேனி மாவட்ட போலீஸ்.

இதையும் மீறி இன்று (அக்டோபர் 19) கூட்டத்துக்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கைது செய்யப்பட்டார்.

“ மத்திய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று காலை 10 மணியளவில் தேனி - போடி சாலையில் நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்திற்கு வருகிற காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுக்கிறார்கள். காங்கிரஸ் கொடியுள்ள வாகனங்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. டிராக்டர்களிலும் விவசாயிகள் வர முடியவில்லை. விவசாயிகள் கூட்டத்தை நடைபெறாமல் தடுப்பதற்கு காவல்துறையினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.இத்தகைய ஜனநாயக சட்டவிரோத செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். அதிமுகவின் ஆண்டு விழாவுக்கு எல்லா விதிகளும் மீறப்படுகின்றன. ஆனால் காங்கிரசாரை கூட்டம் போட தடை விதிக்கிறார்கள்” என்று கண்டித்தார் அழகிரி.

-வேந்தன்

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

திங்கள் 19 அக் 2020