மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 அக் 2020

7.5% இட ஒதுக்கீடு - ஆளுநரின் தாமதம் நியாயமற்றது: ராமதாஸ்

7.5% இட ஒதுக்கீடு - ஆளுநரின் தாமதம் நியாயமற்றது: ராமதாஸ்

7.5 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநருக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், மருத்துவ இடங்களில் 7.5% உள் ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான, மசோதா ஆளுநர் பரிசீலனையில் இருக்கிறது. எனவே ஆளுநரின் முடிவு வரும் வரை, மருத்துவ கலந்தாய்வு தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படமாட்டாது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது. இதனையடுத்து, வழக்கு அக்டோபர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

ஆளுநர் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு என்ற உயிர்த்தண்ணீர் உடனடியாக ஊற்றப்படவில்லை என்றால், அரசு பள்ளி மாணவர்களில் ஒருவர் கூட மருத்துவப் படிப்பில் சேர முடியாது என்று புள்ளிவிவரங்களோடு எச்சரித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இதுபற்றி அவர் நேற்று (அக்டோபர் 18) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விழுக்காடு, கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் ஒரு விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதில் இருந்தே அவர்கள் எந்த அளவுக்கு பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நடப்பாண்டில் 1615 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதால், அவர்கள் அனைவருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்து விடாது. மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களின் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவுள்ள குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்களை (கட்- ஆஃப்) எடுத்தவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களில் 400 மதிப்பெண்களுக்கும் கூடுதலாக ஒரே ஒரு மாணவர் மட்டும் தான் எடுத்துள்ளார். அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களைப் பொறுத்தவரை 4 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு கூடுதலாகவும், 14 மாணவர்கள் 400 மதிப்பெண் முதல் 500 மதிப்பெண்கள் வரையிலும் பெற்றுள்ளனர். 71 மாணவர்கள் 300 முதல் 400 மதிப்பெண்கள் வரையிலும் எடுத்துள்ளனர். இந்த மதிப்பெண்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு போதுமானவை அல்ல என்பது தான் யதார்த்தம் என்று கூறிய ராமதாஸ்,

முதற்கட்ட மதிப்பீடுகளின்படி நடப்பாண்டில் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பொதுப்பிரிவினருக்கு 500-க்கும் கூடுதலாகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 480-க்கும் கூடுதலாகவும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு 450-க்கும் அதிகமாகவும் இருக்கும் எனவும் கூறினார்.

மேலும், “இத்தகைய சூழலில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் ஒருவருக்குக் கூட மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்புகள் இல்லை. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர இயலும். 7.5% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் மட்டுமே இந்த நிலையை மாற்ற இயலும்.

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

திங்கள் 19 அக் 2020