மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 அக் 2020

திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜாவுக்கு கொரோனா!

திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜாவுக்கு கொரோனா!

மன்னார்குடி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும், சாதாரண மக்கள் தொடங்கி, அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், சினிமா பிரபலங்கள் என பலரையும் பாதித்து வருகிறது.

குறிப்பாக, மக்கள் பணிகளில் ஈடுபடும் அரசியல் கட்சியினருக்கு அதிகளவு கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக பொருளாளர் டிஆர் பாலுவின் மகனும், தற்போதைய மன்னார்குடி திமுக எம்எல்ஏவுமான டி.ஆர்.பி ராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுகவின் மூத்த முன்னோடி, தஞ்சை மாவட்டத்தில் திமுகவை வளர்த்தெடுத்ததில் பெரும் பங்காற்றிய மன்னை நாராயணசாமி நினைவு தினம், கடந்த அக்டோபர் 17ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டி.ஆர்.பி ராஜா மன்னார்குடியில் உள்ள மன்னை நாராயணசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிறகுதான் தனக்குத் தொற்று அறிகுறிகள் இருப்பதாக உணர்ந்து தனிமைப்படுத்திக் கொள்வதாகத் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வில் ராஜாவோடு கலந்து கொண்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விசிட் அடித்து ஆய்வு செய்திருக்கிறார் டிஆர்பி ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

திங்கள் 19 அக் 2020