மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 அக் 2020

எடப்பாடி வீட்டில் ஸ்டாலின்

எடப்பாடி வீட்டில் ஸ்டாலின்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவையொட்டி ஏற்கனவே இரங்கல் தெரிவித்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின்... இன்று (அக்டோபர் 19) சென்னையில் உள்ள முதல்வரின் வீட்டுக்குச் சென்று நேரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 12ஆம் தேதி இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் தவசாயி அம்மாள் தனது 93ஆவது வயதில் காலமானார். இதையடுத்து தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் உள்ள சிலுவம்பாளையம் கிராமத்திற்கு சென்றார் முதல்வர். அங்கே தாயாரின் இறுதி நிகழ்வு நடைபெற்றது.

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் வருவதற்குள் 13ஆம் தேதி காலையே அவரின் தாயாருடைய இறுதி நிகழ்வுகள் நடைபெற்று விட்டன.

ஆனபோதும் பல்வேறு உயர் அதிகாரிகள், பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என சாரை சாரையாக முதல்வரின் சொந்த ஊரான சிலுவம்பாளையம் சென்று அவரிடம் இரங்கல் தெரிவித்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து பலர் பேருந்துகளை வாடகை க்கு எடுத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக முதல்வரின் ஊருக்கு வந்தனர்.

தனக்கு ஆறுதல் தெரிவிக்க வந்த அனைவரிடமும் எழுந்து நின்று சில வார்த்தைகள் பேசி அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை சொல்லி சாப்பிட்டு விட்டு செல்லச் சொன்னார் எடப்பாடி.

மேலும் சிலுவம்பாளையம் கிராமத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலான விவரம் அறிந்து, உடனடியாக தனது பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமியிடம் சொல்லி யாருக்கும் தொந்தரவு இல்லாமல் முறைப்படுத்திட அறிவுறுத்தினார் எடப்பாடி.

திமுக சார்பில் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி முதல்வரின் கிராமத்தில் உள்ள வீட்டுக்குச் சென்று இரங்கல் தெரிவித்தார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய இரங்கல் செய்தியையும் முதல்வரிடம் அளித்தார். திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முத்துசாமி முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் குடும்ப ரீதியான நிகழ்வுகளை முடித்து கொண்டு 18ஆம் தேதி இரவு சென்னை திரும்பினார் எடப்பாடி. இதையடுத்து இன்று காலை முதல்வரின் வீட்டுக்கு சென்ற திமுக தலைவர் மு க ஸ்டாலின் அங்கே வைக்கப்பட்டிருந்த முதல்வரின் தாயார் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி ஆகியோர் சென்றிருந்தனர்.

முதல்வரை நேரில் சந்தித்து தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார் ஸ்டாலின். அதற்கு முதல்வர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தினம்தோறும் தமிழக அரசுக்கும் முதல்வர் எடப்பாடிக்கும் எதிராக தொடர்ந்து அறிக்கைகள், பேட்டிகள் அளித்துவரும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியலை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தனி மனித உணர்வோடு முதல்வரின் தாயாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு அரசியலில் ஆரோக்கிய அணுகு முறைக்கான அடுத்த கட்டமாக இது அமைந்துள்ளது.

வேந்தன்

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

திங்கள் 19 அக் 2020