மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 அக் 2020

அதிமுக வேட்பாளர்களை அறிவித்தாரா தளவாய் சுந்தரம்?

அதிமுக வேட்பாளர்களை அறிவித்தாரா தளவாய் சுந்தரம்?

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை அக்டோபர் 7 ஆம் தேதியோடு ஓய்ந்த நிலையில்... மாவட்ட அளவில் அதிமுக வேட்பாளர்கள் யார் என்ற சர்ச்சை புதிதாக வெடித்துள்ளது.

அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவின் 49வது ஆண்டு விழா நடைபெற்றது. அன்றே அதிமுக அமைப்புச் செயலாளரும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான தளவாய் சுந்தரத்தின் 62 ஆவது பிறந்த நாளும் கூட.

இதை ஒட்டி அன்று இரவு தக்கலையில் நடந்த விழாவில்..‌ குமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூவர் பெயரை தளவாய்சுந்தரம் அறிவித்திருப்பதாக சர்ச்சை எழுந்ததுள்ளது.

தக்கலையில் நடந்த அதிமுக கட்சியின் 49 வது ஆண்டு விழாவில் பேசிய தளவாய்சுந்தரம்,"வருகிற சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தளவாய்சுந்தரம், நாகர்கோவில் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ராஜன், பத்மநாபபுரம் தொகுதியில் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜாண்தங்கம் ஆகியோர் போட்டியிடுவார்கள்" என அறிவித்ததாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக தொண்டர்கள் தன்னிடம் கூறியதாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று அக்டோபர் 18ஆம் தேதி குமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,."அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பாளர் பெயரை அறிவிக்கவேண்டும் என்றால் முதல்வரோ, துணைமுதல்வரோ அல்லது கட்சியின் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவோ தான் அறிவிக்கவேண்டும்.

தேர்தலில் போட்டியிட அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. அது எல்லோருடைய கனவும் கூட அந்த கனவை தகர்க்கும் நோக்கில் குமரி மாவட்டத்தில் வேட்பாளர் அறிவிப்பு என்ற தன்னிச்சையான முடிவு கட்சி கட்டுப்பாட்டை மீறும் சர்வாதிகார போக்கு. தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு விடுவார்" என்று கூறினார்.

வேந்தன்

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

திங்கள் 19 அக் 2020