மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 அக் 2020

விஜய் சேதுபதி -முரளிதரன் சர்ச்சை: ஷோபா சக்தி வேண்டுகோள்

விஜய் சேதுபதி -முரளிதரன் சர்ச்சை: ஷோபா சக்தி வேண்டுகோள்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைச் சம்பவங்களின் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அறிவிப்பும், மோஷன் போஸ்டரும் வந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது.

விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கக் கூடாது என்றும், நடிப்பதில் தவறில்லை என்றும் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதுபற்றி முத்தையா முரளிதரனும் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் அறியப்பட்ட ஈழத் தமிழ் எழுத்தாளரான ஷோபா சக்தி இந்த விவகாரம் குறித்து ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று (அக்டோபர் 18) அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

“ விஜய் சேதுபதி நடிக்கப் போவதாகச் சொல்லும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறான '800' திரைப்படத்தின் Official Motion Poster பார்த்தேன். 1.16 நிமிடங்கள் ஓடக் கூடிய இச் சலனச் சித்திரம் ஆரம்பிப்பதே 1983-ல் மலையகத் தமிழர்கள் மீது சிங்கள வன்முறையாளர்கள் நிகழ்த்தும் இனக்கொலையில் தான்.

முரளியின் தந்தையார் முத்தையா சிங்களக் காடையர்களால் வெட்டப்படுவதைச் சிறுவன் முரளி பார்க்கிறான். (இந்த சம்பவத்தை முரளி ஏற்கனவே ஒரு நேர்காணலில் சொல்லியிருந்ததால் காட்சியைக் கிரகிக்கக் கூடியதாக உள்ளது). நடுவில் சில சிறப்பான பந்துவீச்சுக் காட்சிகள். கடைசியில் பாகிஸ்தானில் முரளி குழுவினர் மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதல். இந்த Motion Poster-ரை வைத்துப் பார்த்தால், சிங்கள இனவெறியர்களும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் (No - Ball) அம்பயர்களும் இத் திரைப்படத்தைக் கடுமையாக எதிர்க்க வாய்ப்புள்ளது என்றுதான் நினைக்கிறேன். தமிழ்த் தரப்புகள் படம் வெளியாகும்வரை காத்திருந்து தங்களது எதிர்ப்பையோ ஆதரவையோ வழங்கலாம் எனப் பரிந்துரைக்கிறேன். அவசரப்பட்டு தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளாதீர்கள் தங்கங்களா” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: ...

7 நிமிட வாசிப்பு

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: டெல்லியில் வெள்ளைக்கொடி திட்டமா?

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

2 நிமிட வாசிப்பு

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

ஞாயிறு 18 அக் 2020