மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 அக் 2020

உப்மா இண்டியன்ஸ்: அப்டேட் குமாரு

உப்மா இண்டியன்ஸ்: அப்டேட் குமாரு

டீக்கடையில காலை வேளையில நின்னுக்கிட்டிருந்த குடும்பஸ்த அண்ணனைப் பார்த்து, ‘என்னன்னே இங்க நிக்கிறீங்க. வீட்ல சாப்பிடலையா?னு கேட்டேன். பாவமா என்னைப் பாத்தவரு, ‘தம்பி... கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். உப்புமாவுக்கு பதிலா வேற எதையாவது கண்டுபிடிக்கச் சொல்லுய்யா... புண்ணியமா போகும். டெய்லி உப்புமாவா போட்டு தாக்குறா. அதனாலதான் டீக்கடையில ரெண்டு வடையை தின்னுட்டு போகலாம்னு வந்தேன்’குறாரு. கொரோனா பீதியை விட, நாட்ல உப்புமா பீதிதான் அதிகமா இருக்கு. மோடியை ஒரு எட்டுமணி அறிவிப்பு விடச் சொன்னாதான் சரியா வரும்போலிருக்கு.

நீங்க அப்டேட்டைப் பாருங்க...

நாகராஜ சோழன்

இந்திய நிலப்பகுதியை எந்த நாட்டாலும் கைப்பற்ற முடியாது - அமித்ஷா

ஆமா, நாங்களே வித்துருவோம்.

இப்படிக்கு நிர்மலா மேடம்.

PrabuG

நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியிடப்பட்ட 10 மாணவ, மாணவிகளின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை - ஆதார் ஆணையம்.

போட்டோவை வச்சு யாருடைய ஆதார் கார்டு எதுன்னே கண்டு பிடிக்க முடியாதாம் இதுல ஆராய்ச்சி வேற.

கடைநிலை ஊழியன்

ஞாயிற்றுக்கிழமை..

8 மணிக்கு எழுந்து, ஐயோ லேட் ஆகிருச்சு கறி கடைக்கு போகணும் னு சொல்றவன் - குடும்பஸ்தன் !!

10 மணிக்கு எழுந்து, "சாரி பேபி குட் மோர்னிங்" நல்ல தூங்கிட்டேன் னு சொல்றவன் - கமிட்டேட் !!

12 மணிக்கு எழுந்து, அம்மா தோசை ஊத்து பசிக்குது னு சொல்றவன் - மொரட்டு சிங்கிள் !!

ℍ𝕒𝕣𝕚𝕥𝕙𝕣𝕒𝕟𝕒𝕕𝕙𝕚 ℝ𝕒𝕛𝕒

"Saree" வாங்கி கொடுத்து மனைவியை சமாதானம் பண்றவன் மனுசன்,

"Sorry" சொல்லி மனைவியை சமாதானம் பண்றவன் பெரிய மனுசன்!

மயக்குநன்

வாக்குச் சாவடிகள்' அளவில் தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்துவோம்!- சி.டி.ரவி.

ஏன்... இப்ப 'வீக்'குச் சாவடிகளா இருக்கோ..?!

தர்மஅடி தர்மலிங்கம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு சொந்தமாக வாகனம் இல்லை -சொத்து விபர கணக்கில் தகவல்

அதான் சொந்தமா ஒரு நாடே இருக்கே..

மயக்குநன்

புதிய உறுப்பினர்கள் பெருமளவில் இணைந்து வருகின்றனர்!- கமல்.

பிக்பாஸ் வீட்டிலேயா..?!

amuthu

நமக்குயாருக்காவது * வணக்கம் " என்று சொன்னாலே, அடுத்து, " கோவிட்-19 செயல்முறைகள் இப்பொழுது தொடங்கி விட்டது " என்று சொல்லி விடுவார்களோ என பயமாக இருக்கிறது.

மெத்த வீட்டான்

முதல்ல நீட் தேர்வை ஆதரிச்சு பேசுனாங்க

இனி கோச்சிங் சென்டர்களையும் ஆதரிச்சு பேசுவாங்க !

பன்னீர் டெல்லி பயணம்: அஜெண்டா சசிகலா

4 நிமிட வாசிப்பு

பன்னீர் டெல்லி பயணம்:  அஜெண்டா சசிகலா

பன்னீர் பின்னால் எடப்பாடியும் டெல்லி பயணம்!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் எடப்பாடியும் டெல்லி பயணம்!

சார்பட்டா: அடர்த்தியும் நுட்பமுமாக ஒரு திரைப்படம்!

16 நிமிட வாசிப்பு

சார்பட்டா: அடர்த்தியும் நுட்பமுமாக ஒரு திரைப்படம்!

ஞாயிறு 18 அக் 2020