மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 அக் 2020

அதிமுக ஆட்சியை விரும்பும் இரண்டு தரப்பு: ஸ்டாலின்

அதிமுக ஆட்சியை விரும்பும் இரண்டு தரப்பு: ஸ்டாலின்

திமுகவை யாராலும் அசைக்க முடியாது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.எஸ்.சந்திரன்- அழகம்மாள் மகன் இளையசெல்வனுக்கும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கலையரசன் - ராஜலெட்சுமி ஆகியோரின் மகள் காவினிப்பிரியாவுக்கும் இன்று (அக்டோபர் 18) திருமணம் நடைபெற்றது. காணொலி மூலம் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

“உலகம் முழுவதும் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், உலகத்திலேயே பழனிசாமி தலைமையிலான ஆட்சி மட்டும் தான் கொரோனாவை வைத்து புதிது புதிதாக என்னவெல்லாம் ஊழல் செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது” என்று விமர்சித்த ஸ்டாலின், பத்தாண்டுகளாகச் சூழ்ந்திருக்கும் இருட்டில் இருந்து மீண்டு, உதயசூரியனின் வெளிச்சத்தைக் காணத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள் எனவும் கூறினார்.

“இருண்ட ஆட்சி தொடர வேண்டும் என விரும்புவோர் இரண்டு தரப்பினர் மட்டும்தான். ஒன்று பழனிசாமியும், அவருடைய ஆட்சியில் கொள்ளை அடிப்பவர்கள். இரண்டு - எடப்பாடி பழனிசாமியையும் அவருடைய கொள்ளைக் கூட்டத்தையும் இயக்கி வரும் மத்திய பா.ஜ.க. ஆட்சியாளர்கள்” என்ற ஸ்டாலின், ஏனென்றால், தலையாட்டி பொம்மைகளின் ஆட்சி தமிழ்நாட்டில் தொடர்ந்தால்தானே நீட் தேர்வு மூலம் ஏழை மாணவர்களுடைய மருத்துவக் கனவைத் தகர்த்து - கோச்சிங் செண்டர் எனும் பெயரில் அவற்றை நடத்தும், தங்களுக்கு வேண்டிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபத்தைச் சம்பாதிக்க முடியும் என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், “இந்த இயக்கத்தைப் பார்த்து, குடும்பக் கட்சி என்று சொல்பவர்களுக்கு, இந்த கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் எங்கள் குடும்பம்தான் என்று பதில் சொல்கின்ற பேரியக்கம் இது. குட்கா ஊழலுக்கும் - குவாரி காண்ட்ராக்ட்டுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களைப் பயன்படுத்துவோருக்கு இதன் அருமை தெரியாது. கரைவேட்டியும் கருப்பு - சிவப்பு துண்டும்தான் நமது நிரந்தர முகவரி. நாம் தி.மு.க.காரர்கள் என்பதுதான் நமது அசையாச் சொத்து. நம்மையோ இந்த இயக்கத்தையோ எவராலும் அசைக்கவும் முடியாது. ஆட்டவும் முடியாது” என்று கூறி உரையை நிறைவு செய்தார் ஸ்டாலின்.

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: ...

7 நிமிட வாசிப்பு

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: டெல்லியில் வெள்ளைக்கொடி திட்டமா?

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

2 நிமிட வாசிப்பு

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

ஞாயிறு 18 அக் 2020