மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 அக் 2020

மிகை எனும் புரட்டு: ஜெ. ஜெயரஞ்சன்

மிகை எனும் புரட்டு: ஜெ. ஜெயரஞ்சன்

நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் தினந்தோறும் உரையாற்றி வருகிறார். சமகால மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசுவதோடு, அரசின் செயல்பாடுகளை விமர்சனத்துக்கு உட்படுத்தி வருகிறார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களில் இருந்து இன்று (அக்டோபர் 18) பேச்சை ஆரம்பித்த ஜெயரஞ்சன், “வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு ஏதுவாக இயற்றப்பட்ட சட்டங்கள் இவை என்பதுதான் நமது புரிதல்” என அழுத்தமாகத் தெரிவித்தார்.

தற்போது நாம் உணவுப் பஞ்சத்தை தாண்டி வந்துவிட்டதாகவும், உணவு ஏற்றுமதி செய்யும் நிலையில் இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் கதை கூறுவதாக சாடினார்.

“சத்தான உணவை சாப்பிடுதல், வயதுக்கு ஏற்ற உயரம் மற்றும் எடை இருத்தல், 5 வயதுக்குள் மரணமடையாமல் இருந்தால் அவர்கள் பசிப்பிணி இல்லாமல் இருக்கிறார்கள் என்று அர்த்தம். பசியை இரண்டு வகையாக பிரிக்கலாம். அதில் இரண்டாவது, சாப்பிட வெறும் ஊறுகாய் உள்ளிட்டவற்றை மட்டும் எடுத்துக்கொள்வது. இதனால் அப்போதைய பசி மட்டும்தான் தீருமே தவிர ஊட்டச்சத்துக்கள் இருக்காது” என்றவர்,

“இந்தியா உலகளாவிய பட்டினிக் குறியீட்டில் 94ஆவது இடத்தில் உள்ளது. நாம் உணவு மிகை நாடு என்று சொல்லிக்கொண்டாலும் கூட மிகப்பெரும்பான்மை மக்களான ஏழைகளால் பசியைத் தாண்டி செல்ல முடியவில்லை. நம்மால் போதிய அளவில் பசியை போக்கமுடியவில்லை. ஆகவே, நாம் உணவு மிகை மாநிலம் என்று பெருமை பேசிக்கொண்டிருக்கக் கூடாது” என்று குறிப்பிட்டார்.

முழுக் காணொலியை கீழே காண்க

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: ...

7 நிமிட வாசிப்பு

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: டெல்லியில் வெள்ளைக்கொடி திட்டமா?

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

2 நிமிட வாசிப்பு

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

ஞாயிறு 18 அக் 2020