மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 அக் 2020

திமுக ஆட்சியில் ஜெ. மரண விசாரணை: ஸ்டாலின்

திமுக ஆட்சியில் ஜெ. மரண விசாரணை: ஸ்டாலின்

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் தொடர்ந்த வழக்கு நடந்து வருகிறது. ஆணையத்தின் விசாரணைக்கு ஏற்கனவே இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தடையை நீக்க தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், அப்பல்லோ மருத்துவமனை தொடுத்த மேல்முறையீட்டு விசாரணை தாமதமாவதை தமிழக அரசின் வழக்கறிஞரும், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 18) வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக அரசுக்கு எழுதிய கடிதத்திலேயே அவ்வாறு நீதிபதி ஆறுமுகசாமி குறிப்பிட்டிருப்பது, ஜெயலலிதாவின் மரணத்தில், அதிமுக அமைச்சர்களே அப்போது சுட்டிக்காட்டிய சதியை விசாரித்து முடித்து வெளியிடுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தயாராக இல்லை; துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதைச் சிறிதும் விரும்பவில்லை என்று நன்றாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து 3 மாதங்களுக்குள் தனது அறிக்கையை ஆங்கிலத்திலும் தமிழிலும் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.37 மாதங்கள் அதாவது பன்னிரெண்டு மூன்று மாதங்கள் உருண்டோடி விட்டன. ஆனால், இன்னும் விசாரணை கமிஷனின் விசாரணை முடிந்து, அறிக்கை வரவில்லை என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

ஜெயலலிதா மரணத்தை வைத்து, ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோருக்கு இடையில் இந்த நான்கு வருடங்களாக ஒரு நாடகம், பல பாகங்களாக அரங்கேறி நடக்கிறதே தவிர, ஒரு முன்னாள் முதல்வரின் மரணத்தில், மூச்சுக்கு முன்னூறு தடவை ஜெயலலிதாவின் ஆட்சி என்று குறிப்பிடப்படுபவரின் மரணத்தில், அதிமுக அமைச்சர்களே குற்றம்சாட்டிக் கொண்ட சதி குற்றச்சாட்டு பற்றி இன்னும் விசாரித்து முடிக்கவில்லை. விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையமும் 3 வருடங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டு விட்டது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

மேலும், “அதிமுக அமைச்சர்களோ, ஜெயலலிதா மறைவால் முதல்வரான ஓ.பன்னீர்செல்வமோ, இப்போது முதல்வராக இருக்கும் பழனிசாமியோ தங்கள் பதவி சுகத்திற்கு இந்த விசாரணை ஆணையத்தை முடக்கி வைத்திருக்கிறார்களே தவிர, ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சதியைக் கண்டுபிடித்து வெளிக் கொண்டுவரத் தயாராக இல்லை” என்ற ஸ்டாலின்,

தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று, திமுக ஆட்சி அமைந்ததும், நான் ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரங்களில் கூறியபடி, மறைந்த ஜெயலலிதா மரணத்தில் உள்ள சதியை விசாரித்து, மர்மக் குற்றவாளிகளின் முகத்திரையை விலக்கி, அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று உறுதியளித்துள்ளார்.

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: ...

7 நிமிட வாசிப்பு

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: டெல்லியில் வெள்ளைக்கொடி திட்டமா?

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

2 நிமிட வாசிப்பு

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

ஞாயிறு 18 அக் 2020