மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 அக் 2020

உதயநிதிக்கு முக்கியத்துவம்: பிரசாந்த் கிஷோர் ஸ்டாலினுக்கு அளித்த ரிப்போர்ட்

உதயநிதிக்கு முக்கியத்துவம்:  பிரசாந்த் கிஷோர்  ஸ்டாலினுக்கு அளித்த ரிப்போர்ட்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் 2019 ஜூலை மாதம் பொறுப்பேற்றார். 2019 மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த பதவியும் இல்லாமல் அவர் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த நிலையில் தேர்தல் முடிந்த பிறகு அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி மாநில செயலாளர் ஆனவுடனேயே அடுத்தடுத்து கட்சிக்குள் இளைஞரணிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளராக இருந்த ராஜேஷ்குமார், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதேபோல இளைஞரணி மாநில துணைச் செயலாளராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இதையெல்லாம் தாண்டி... அண்மையில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ அன்பழகன் கொரோனா தொற்றால், காலமான நிலையில் அவருக்கு பதிலாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு மாவட்ட பொறுப்பாளராக உயர்த்தப்பட்டார். இது பல சர்ச்சைகளுக்கு வித்திட்டபோதும் உதயநிதி தனது உறுதியை விடவில்லை. சீனியர்கள் பலர் இருக்கையில் சிற்றரசுவை அண்ணா அறிவாலயம், ஸ்டாலின் இல்லம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் ஆக்கியதை பலர் எதிர்த்தனர். பிறகு பகுதிச் செயலாளர்களை ஸ்டாலினே நேரில் அழைத்து சமாதானப்படுத்தினார்.

இப்படி கட்சிக்குள் பல்வேறு வகைகளில் இளைஞரணி பிரமுகர்களை மாவட்ட பொறுப்பாளர்களாக நியமித்து அதன் மூலம் கட்சிக்குள் தன்னுடைய எல்லையை அதிகமாக்க தொடர்ந்து காய் நகர்த்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

கட்சி அளவில் இப்படி என்றால் 2021 சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்விலும் உதயநிதி ஸ்டாலின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார்கள் இளைஞரணி வட்டாரத்தினர்.

குறைந்தபட்சம் 40 வேட்பாளர்களையாவது இளைஞரணி சார்பில் நிறுத்த வேண்டும் என்றும் அடுத்து திமுக ஆட்சி அமையும் பட்சத்தில் அவர்களில் 10 பேரை அமைச்சர்களாக்கவும் உதயநிதி திட்டமிட்டிருப்பதாக இளைஞரணியினரே கூறுகிறார்கள். திமுக ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் யார் யார் அமைச்சராக வேண்டும் என்ற பட்டியலும் உதயநிதி தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தேசப் பட்டியல் இளைஞர் அணியில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சர் என குறிப்பிடப்படுகிறார்.

இப்படி உதயநிதியின் ப்ரமோஷன் ஒருபக்கம் தீவிரமாக நடந்துகொண்டிருக்க... திமுகவின் தேர்தல்  உத்தி வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோர், தான் மேற்கொண்ட ஆய்வில் உதயநிதிக்கு கட்சியில் அளிக்கப்படும் முக்கியத்துவம் பற்றியும் ஆராய்ந்துள்ளார்.

அதில் உதயநிதிக்கு தலைமை முக்கியத்துவம் அளிப்பதாலேயே மற்ற நிர்வாகிகளும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்றும் ஆனால் கட்சிக்கு வெளியே திமுக அபிமானிகளிடமும் பொதுமக்களிடமும் உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றிய அதிருப்தி இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

கலைஞர் காலத்தில் ஸ்டாலின் படிப்படியாக வளர்ந்து சக கட்சிப் பிரமுகர்களோடு சேர்ந்து உழைத்து முன்னேறினார். ஆனால் ஸ்டாலின் காலத்தில் உதயநிதிக்கு வேகவேகமான முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் திமுக அபிமானிகளும் மக்களும் கருதுகிறார்கள் என பிரசாந்த் கிஷோர் ஸ்டாலினுக்கு அளித்துள்ள ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருக்கிறார். எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி போட்டியிடாமல் இருப்பது நல்லது என்றும் பிகேவின் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள்.

இதற்கிடையே, “உதயநிதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அவரது உழைப்புக்குத்தான் அளிக்கப்படுகிறதே தவிர வேறு எதற்காகவும் இல்லை. கட்சிக்கு இளைஞர்களை அதிகமாகக் கொண்டு வருவதில் உதயநிதியின் பங்கு பெரியது. எனவே அவருக்கான உயரம் நியாயமானதுதான்” என்று இளைஞரணி நிர்வாகிகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: ...

7 நிமிட வாசிப்பு

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: டெல்லியில் வெள்ளைக்கொடி திட்டமா?

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

2 நிமிட வாசிப்பு

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

ஞாயிறு 18 அக் 2020