மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 ஜன 2021

சீமானுக்கு என்னாச்சு?

சீமானுக்கு என்னாச்சு?வெற்றிநடை போடும் தமிழகம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப்டம்பர் 28) சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வழக்கமாக தினமும் அலைபேசி செய்யும் நண்பர்கள் இன்று காலை பேச முயற்சித்தபோது சீமான் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் விசாரித்தபோதுதான் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் சீமானுக்கு உடல் நலக் குறைவா என்று அவரது கட்சியினரும் குழப்பம் அடைந்திருக்கிறார்கள்.

53 வயதுடைய சீமானுக்கு என்னாச்சு என்று அவருக்கு நெருக்கமானவர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“சீமான் தொடர் மூட்டு வலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். சீமான் பள்ளிப் பருவத்திலிருந்தே கபடி வீரர். அப்போது அவருக்கு கால் மூட்டில் அடிபட்டிருக்கிறது. தொடர்ந்து சென்னை வந்து சினிமாவில் இருந்தபோதும் அவர் கபடியையும், காலை நேர உடற்பயிற்சியையும் விடவில்லை. தினமும் அதிகாலையில் காசி மேடு கடற்கரைக்குச் சென்று நீண்ட தூரம் ஓட்டப் பயிற்சி செய்வது சீமானின் வழக்கம். அதிக பயிற்சி செய்யும்போது கால் வலியும், மூட்டு வலியும் அதிகமாவதும் உண்டு. அதுபோல வலி அதிகமாகவே வழக்கமாய் தான் செல்லும் சிம்ஸ் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். வழக்கமான மருத்துவ சோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்கிறார்கள்.

ஆனால் சீமான் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிவிட்டார் என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சமூக தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

-வேந்தன்

திங்கள், 28 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon