[மூன்று கட்டங்களாக பீகார் தேர்தல்!

politics

பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பீகாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில், அதன் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. 243 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது பீகார் சட்டமன்றம். கொரோனாவைக் காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததால், பீகாரில் எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில் பீகாருக்கு தேர்தல் அறிவித்தால் மட்டுமே அதன்பிறகு வரும் இடைத் தேர்தல்கள், மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுவது உறுதியாகும்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று (செப்டம்பர் 25) செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, “பீகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும். அக்டோபர் 28 முதல் கட்டம், நவம்பர் 3ஆம் தேதி இரண்டாவது கட்டம், 7ஆம் தேதி மூன்றாவது கட்டத் தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 10ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். மாநிலத்தில் தற்போதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது” என்று தெரிவித்தார்.

பல மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், வாக்காளர்களின் ஜனநாயக உரிமைகளை சமநிலைப்படுத்த ஏதேனும் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது உணரப்பட்டது. அதே நேரத்தில் மக்களின் உடல்நலனை பாதுகாக்க நேர்மையான முயற்சிகளையும் மேற்கொண்டது என்று குறிப்பிட்ட அவர், “தேர்தலில் வாக்காளர்களின் பயன்பாட்டுக்காக 7.2 கோடி ஒற்றை பயன்பாட்டு கை கையுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன: 46 லட்சம் மாஸ்குகள், 6 லட்சம் பிபிஇ உடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றும் விவரித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைபடுத்தப்பட்டவர்கள் வாக்கெடுப்பின் கடைசி நாளில், அந்தந்த வாக்குச் சாவடிகளில், சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் வாக்களிக்க முடியும் என்று குறிப்பிட்டார் ஆணையர். மேலும், “மக்களின் வசதிக்காக வாக்குப்பதிவு நேரம் 1 மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரைக்குப் பதிலாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்” என்றார்.

**எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *