மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன்: நிபந்தனை என்ன தெரியுமா?

எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன்: நிபந்தனை என்ன தெரியுமா?

எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்ததற்கு முதல்வர் கண்டனம் தெரிவித்தது குறித்து எஸ்.வி சேகர் வீடியோ பேசி வெளியிட்டார். அதில், தேசியக் கொடியில் உள்ள மூன்று வண்ணங்களையும், மதங்களையும் தொடர்புப்படுத்தி கருத்தைத் தெரிவித்திருந்தார்.இதனால் தேசிய கொடியை அவமதித்து வீடியோ வெளியிட்டதாக எஸ்.வி.சேகர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் பிரிவு 2-ன் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கு விசாரணையில், "தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என மனுதாரர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். நடந்தவற்றுக்கு நீதிமன்றத்தின் முன் அவர் மன்னிப்பு கோரினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது ஆனால், வழக்கை ரத்து செய்ய வாய்ப்பில்லை" என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எஸ்.வி.சேகர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் தேசியக்கொடியை அவமதித்ததற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவ்வழக்கை இன்று (செப்டம்பர் 16) விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அத்துடன், விசாரணைக்கு அழைக்கும்போது காவல் துறையிடம் நேரில் ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவருக்கு நிபந்தனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

எழில்

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon