மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

மாநில மொழிகள் அலுவல் மொழியாகுமா? மத்திய அரசு பதில்!

மாநில மொழிகள் அலுவல் மொழியாகுமா? மத்திய அரசு பதில்!

மாநில மொழிகள் அலுவல் மொழியாகுமா என்பது குறித்து மத்திய உள் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளுடன் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர்கள் எழுப்பும் பெரும்பாலான கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகவே பதிலளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மாநிலங்களவையில் வைகோ, இந்தி, ஆங்கிலம் அல்லாத பிற பட்டியல்படுத்தப்பட்ட மொழிகளை அலுவல் மொழியாக மாற்றும் திட்டம் மத்திய அரசுக்கு இருக்கிறதா என்றும், அப்படியிருந்தால் அதுதொடர்பான விவரங்களைத் தெரிவிக்க வேண்டுமெனவும் கேள்வி எழுப்பினார்.

அப்படி இல்லையெனில் தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக கிராம மக்கள் அரசின் சட்ட, திட்டங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை எப்படி புரிந்து கொள்வர்” என்றும் கேட்டிருந்தார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய உள் துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “மாநிலங்களின் ஆலோசனையின் பேரில் 1968ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அலுவல் மொழித் தீர்மானத்தில் 3ஆவது பிரிவின்படி இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி ஆகியவை தொடர்பு மொழியாக பயன்படுத்தப்படுகிறது. இந்தி பேசாத மாநிலங்களில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளக் கூடிய வகையில் மத்திய அரசின் நோட்டீஸ் மற்றும் அறிவிப்புகள் மூன்று மொழிகளிலும் இடம்பெற்றிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

எழில்

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon