மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 செப் 2020

மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல்: பாஜக வெற்றி

மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல்: பாஜக வெற்றி

மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

கொரோனா பாதிப்பு தீவிரத்தின் மத்தியில் இன்று (செப்டம்பர் 14) தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலங்களவையின் துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஸ் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய துணைத் தலைவரைத் தேர்வுசெய்ய தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில் 122 பேரின் ஆதரவு பெறும் வேட்பாளரே வெற்றி பெறுவார்.

பாஜக கூட்டணி சார்பில் பீகாரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் எம்.பி ஹரிவன்ஸ் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மனோஜ் ஜா அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மாநிலங்களவையில் இன்று துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. தங்களது வேட்பாளராக ஹரிவன்ஸ் பெயரை பாஜக தேசிய தலைவர் நட்டா முன்மொழிந்தார். மனோஜ் ஜா பெயரை காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, திமுக எம்.பி திருச்சி சிவா உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் ஹரிவன்ஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2018 ஆகஸ்ட் முதல் மாநிலங்களவை துணைத் தலைவராக பதவி வகித்து வரும் ஹரிவன்ஸ், தற்போது இரண்டாவது முறையாக அப்பதவியில் அமர்கிறார்.

பின்னர் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இதுவரை நாம் பார்க்காத சூழலில் நாடாளுமன்றம் இந்த முறை கூடியுள்ளது. பாதுகாப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் உறுதி செய்வது முக்கியம்” என்று தெரிவித்தார்.

ஹரிவன்ஸ் பத்திரிகையாளராகவோ அல்லது சமூக சேவையாளராகவோ இருந்தாலும், அவரை பலருக்கு பிடிக்கும். அவர் அவையை நடத்தும் விதத்தை நாம் பார்த்திருக்கிறோம். ஹரிவன்ஸ் அனைத்து தரப்பினரையும் சார்ந்தவர் என்று குறிப்பிட்ட பிரதமர், “அவை நடவடிக்கைகளை பாகுபாடற்ற முறையில் நடத்தியிருக்கிறார். அவர் ஒரு சிறந்த நடுவராக இருந்திருக்கிறார். வரும் காலங்களிலும் இது போல் தொடர்ந்து இருப்பார். தனது கடமை ஆற்றுவதில் எப்போதும் விடாமுயற்சியுடன் செயல்படுகிறார். நாடாளுமன்றம் ஆக்கப்பூர்வமாகவும், நேர்மறையாகவும் செயல்பட ஹரிவன்ஸ் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்” என்று பாராட்டினார்.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

திங்கள் 14 செப் 2020