திமுக கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும்? ஐபேக் சர்வே!

politics

வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான உத்தி வகுத்தலுக்காக பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்துள்ளதும், அதற்கான பல்வேறு பணிகளில் ஐபேக் குழுவினர் ஈடுபட்டிருப்பதும் மின்னம்பலம் வாசகர்கள் அறிந்ததே. திமுகவுக்காக தமிழகத்தில் பல்வேறு சர்வேக்களிலும் ஐபேக் குழுவினர் இறங்கியுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை மாதத்துக்கு இருமுறை சந்தித்து அவ்வப்போதைய தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேசி அதன் மூலம் மக்களின் எண்ண ஓட்டம் எந்தத் திசையில் செல்கிறது என்பதை கணிக்க சிறப்பு சர்வேக்களை எடுத்து வருகிறது ஐபேக். இது தொடர்பாக ஏற்கனவே மின்னம்பலம் இதழில் [செய்தி](https://www.minnambalam.com/politics/2020/07/10/29/ipac-survedmk-leader-stalin-shock) வெளியிட்டுள்ளோம்.

தற்போது மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் சர்வே முறைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்து போனிலேயே சர்வே எடுத்து வருகின்றது ஐபேக். திமுக வரும் தேர்தலில் 180 சீட்டுகள் வரை ஜெயிக்க முடியும் என்றும், கொங்கு பகுதியில் திமுக 3% சரிவைச் சந்தித்துள்ளது என்றும் ஏற்கனவே கிடைத்த சர்வே முடிவுகளை திமுக தலைமைக்கு அனுப்பியிருக்கிறது ஐபேக். அந்த வகையில் லேட்டஸ்டாக திமுக கூட்டணியைப் பற்றி சர்வே எடுத்துள்ளது ஐபேக்.

“திமுக தலைமையில் இப்போது காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே, மமக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. லேட்டஸ்டாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஐபேக் எடுத்த சர்வேயில் திமுக கூட்டணிக்கு மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 207 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாக திமுக தலைமைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையறிந்து திமுக தலைவர் ஸ்டாலின் மகிழ்ச்சியில் இருக்கிறார். கடந்த சர்வேக்களில் கிடைத்த முடிவுகளை விட இந்த லேட்டஸ்ட் சர்வேயில் திமுக கூட்டணியின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது” என்கிறார்கள் திமுக-ஐபேக் வட்டாரங்களில்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *