y‘பகுதி’களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ஸ்டாலின்

politics

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அணுகுமுறையைக் கண்டு திமுக நிர்வாகிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

சென்னை மேற்கு மாவட்டத்தின் திமுக செயலாளராக இருந்த ஜெ. அன்பழகன் மறைவுக்குப் பின் கடந்த ஜூலை 25 ஆம் தேதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த சிற்றரசுவை மாவட்டப் பொறுப்பாளராக அறிவித்தார் ஸ்டாலின். சிற்றரசு ஜூனியர் என்பதால் மாவட்டத்தில் இருக்கும் சீனியர்கள் பலர் கோபம் அடைந்தனர். குறிப்பாக பகுதிச் செயலாளர்களில் சீனியர்கள் சிலர் மிகவும் வருத்தம் அடைந்தனர்.

இதைப் புரிந்துகொண்டு சிற்றரசுவே சீனியர் பகுதிச் செயலாளர்களை அவர்களது அலுவலகத்துக்கு தேடிச் சென்று சந்தித்தார். எனினும் அன்பகத்தில் சிற்றரசு முதன் முதலில் ஏற்பாடு செய்த அறிமுகக் கூட்டத்தில், பகுதிச் செயலாளர்கள் தங்கள் கோபத்தையும் வருத்தத்தையும் மீண்டும் பகிர்ந்தனர். சிற்றரசுவை நியமிப்பதற்கு முன் தலைமை தங்களிடம் ஒரு கண் துடைப்பு ஆலோசனை கூட மேற்கொள்ளவில்லையே என்பதுதான் அவர்களின் ஆதங்கம். இந்தத் தகவல் எல்லாம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்றது.

இதையடுத்து **ஓரிரு நாட்களுக்கு முன் சென்னை மேற்கு மாவட்டத்திலுள்ள பகுதிச் செயலாளர்களில் சீனியர்களை தன் வீட்டுக்கு தனித்தனியாக அழைத்தார் ஸ்டாலின். அவர்களோடு ஒன் டு ஒன் பேசினார்.** ‘உங்க கோபம் வருத்தம் எல்லாம் புரியுது. அதேநேரம் கட்சித் தலைமை ஒரு முடிவெடுக்கும்போது அதுக்கு ஒத்துழைக்கணும். **உங்களோட கோரிக்கைகள் என்னங்குறதை ஜெ. அன்பழகனே என்கிட்ட ஃபைல் போட்டுக் கொடுத்திருக்காரு. உங்களுக்கு எந்த அசௌகரியமும் வேணாம். அன்பழகன் இருந்தப்ப எப்படி செயல்பட்டீங்களோ அதே வேகத்துல சுதந்திரமா செயல்படுங்க. உங்களுக்கு யாரும் தடையா இருக்க மாட்டாங்க. இளைஞரணியிலேர்ந்து ஒருத்தரை மாவட்டத்துக்குப் போட்டதால நீங்கள்லாம் வேணாம்னு அர்த்தமில்லை. போய், உங்க தொகுதிகள்ல வேலைகளை தீவிரமா பாருங்க. நாளைக்கு நாமதான ஜெயிக்கப் போறோம்**” என்று ஸ்டாலின் பேசப் பேச ஒவ்வொரு பகுதிச் செயலாளரும் உற்சாகம் அடைந்துவிட்டார்கள்.

“ஸ்டாலின் பேச்சின் சாராம்சம் சீனியர் பகுதிச் செயலாளர்களை எல்லாம் எம்.எல்.ஏ. ஆக்குவோம் என்பதுதான். தலைவரே நேரடியாக அழைத்துப் பேசியிருக்கிறார். இதனால் உற்சாகமாகிவிட்டோம். என்ன, நியமனத்துக்கு முன்பே இதைச் செய்திருந்தால் சிற்றரசு நியமனத்தில் சர்ச்சையே வந்திருக்காது” என்று திமுக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *