zபுதிய கல்வி கொள்கையில் பாகுபாடில்லை: பிரதமர்

politics

புதிய கல்வி கொள்கை தொடர்பாக பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களுக்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு எதிர்ப்பு எழுந்ததோடு, அதனை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை குரல்களும் ஒலிக்கின்றன. குறிப்பாக மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். புதிய கல்வி கொள்கையின் மற்ற அம்சங்களை ஆராய தமிழக அரசு குழு ஒன்றையும் அமைந்துள்ளது.

இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் மாற்றத்தக்க சீர்திருத்தங்கள் குறித்து காணொலி மூலம் இன்று (ஆகஸ்ட் 7) நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

“புதிய இந்தியாவுக்கு தேசிய கல்வி கொள்கை அடித்தளம் அமைக்கவுள்ளது: தேசிய கல்விக் கொள்கையில் எந்த பாகுபாடும் இல்லை. 3 முதல் 4 ஆண்டுகாலம் விரிவாக கலந்துரையாடிய பின், லட்சக்கணக்கான ஆலோசனைகளை பரிசீலித்த பின் தேசிய கல்வி கொள்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது: பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு கொள்கைகளை கொண்டவர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். தேசிய கல்விக் கொள்கையை மறுஆய்வு செய்கிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான விவாதம். இது உயர்ந்தது. இதனால் நாட்டின் கல்வி முறைக்கு அதிக பலன் கிடைக்கும்

புதிய கல்விக்கொள்கையை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. எனவே புதிய கல்விக்கொள்கையை நிறைவேற்றும் முடிவை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு நாடும், தனது கல்வி முறையை அதன் தேசிய மதிப்புகளுடன் இணைத்து, அதன் தேசிய இலக்குகளுக்கு தகுந்தபடி சீர்திருத்தி முன்னேறுகிறது. இதன் நோக்கம், நாட்டின் கல்வி முறை, தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினரை, எதிர்காலத்துக்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் என்ற பிரதமர்,

“நமது கல்வியில் ஆர்வம், தத்துவம், நோக்கம் இல்லையென்றால், நமது மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் எப்படி விவேகமான மற்றும் புதுமையான திறனை வளர்த்துக் கொள்ள முடியும்? அதற்கு தகுந்தபடி இந்தியாவின் கல்வி முறை மாற வேண்டும். 10+2 பள்ளி பாடத்திட்டத்தை தாண்டி, தற்போது 5+3+3+4 பாடத்திட்ட அமைப்பு வழங்கப்பட்டுள்ளது” என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், “நமது கல்வி முறையில் இதுவரை எதை பற்றி சிந்திக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த புதிய கல்வி கொள்கையில் எப்படி சிந்திக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது: குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு கேள்வி, கண்டுபிடிப்பு, கலந்துரையாடல் மற்றும் பகுப்பாய்வு அடிப்படையிலான முறைகளை வலியுறுத்துவதே இப்போதைய முயற்சி. இது கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை குழந்தைகளிடையே அதிகரிக்கும். அவர்களின் வகுப்பில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும்” என்று தெரிவித்தார் பிரதமர்.

ஒவ்வொரு மாணவரும் தங்கள் விருப்பத்தை பின்பற்ற வாய்ப்பு இருக்க வேண்டும். வசதி மற்றும் தேவைக்கேற்ப, ஒருவர் எந்த பட்டத்தையும் அல்லது பாடத்தையும் எடுக்கலாம் மற்றும் அவர்கள் விரும்பும் போதெல்லாம் அவர்கள் வெளியேறலாம்:ஒருவர் தனது வாழ்க்கை முழுவதும் ஒரே தொழிலில் இருக்கமாட்டார் என்ற யுகத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இதற்காக, ஒருவர் தொடர்ந்து தனது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *