bபௌர்ணமி: அதிமுகவின் அடுத்த பட்டியல்?

politics

அதிமுக நிர்வாகிகளின் மாற்றப் பட்டியல் கடந்த ஜூலை 25ஆம் தேதி வெளிவந்தது. இதன்படி மொத்தம் 31 மாவட்ட அமைப்புகளுக்கான செயலாளர்களும், பல்வேறு துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகளும், அமைப்புச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

ஏற்கனவே ஒரே மாவட்டமாக இருந்த அமைப்புகளை இரண்டாகப் பிரித்து புதிய மாவட்டங்கள், புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். மாவட்ட அளவில் மட்டுமல்லாமல் ஒன்றியங்களையும் பிரித்து புதிய ஒன்றியச் செயலாளர்களையும் மிக வேகமாக நியமித்து வருகிறது அதிமுகவின் இரட்டைத் தலைமை.

முதலில் வெளிவந்த பட்டியலில் முதல்வரின் சேலம் மாவட்டம், துணை முதல்வரின் தேனி மாவட்டம் உள்ளிட்ட மாவட்டங்கள் இடம்பெறவில்லை. மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் தொடர்பான பஞ்சாயத்துகள் அதிகமானதால், அவை அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 3ஆம் தேதி நிறைந்த பௌர்ணமி என்பதால் அதிமுகவின் அடுத்த கட்ட நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

“புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள், ஒன்றியங்களுக்கான நிர்வாகிகள் அறிவிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்டச் செயலாளர் முதல் கடைசி நிர்வாகி வரையிலான பதவிகள் ஒன்றுகூட மிச்சம் வைக்கப்படாமல் நிரப்பப்பட்டு வருகின்றன. அதாவது எந்தப் பதவியும் காலியாக இருக்கக் கூடாது. கட்சியில் எத்தனை பதவிகள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் உரியவர்கள் நியமிக்கப்பட்டு நிரப்பப்பட வேண்டும். அதன் மூலம் நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திட வேண்டும். நாளை கட்சியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அப்போது இந்த நிர்வாகிகள் பலம் நமக்கு உதவும் என்பதுதான் எடப்பாடியின் கணக்கு. அந்த அடிப்படையில் முதல் பட்டியலில் விடுபட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய அடுத்த பட்டியல் பௌர்ணமி அன்று வெளியாகலாம் என்று தலைமைக்கு நெருக்கமானார் சொல்கிறார்கள். இந்தப் பட்டியலும் வெளியானால் இன்னும் பலருக்கு பதவிகள் கிடைக்கும்” என்கிறார்கள்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *