மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஆக 2020

அமெரிக்காவிலும் டிக் டாக்கிற்கு தடை: ட்ரம்ப்

அமெரிக்காவிலும் டிக் டாக்கிற்கு தடை: ட்ரம்ப்

இந்தியாவைத் தொடர்ந்து தற்போது  அமெரிக்காவிலும் டிக் டாக்கை தடை செய்ய பரிசீலித்து வருவதாக  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்திய சீன எல்லை பிரச்சினையைத் தொடர்ந்து இந்தியாவில், டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. அதைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் 47 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதுபோன்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அமெரிக்க செனட்டர்கள் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் உயரதிகாரிகள் ஆகியோர் டிக் டாக்கை நாட்டில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் வகையில் இந்த செயலி இருப்பதாகவும், சீன உளவுத் துறையால் டிக் டாக் செயலியில் இருக்கும் தகவல்கள் பயன்படுத்தக்கூடும்  என்றும் அதிபரிடம் அதிகாரிகள் தொடர்ந்து தெரிவித்துள்ளனர். எனவே, இந்த செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் அல்லது சென்சார்ஷிப்  செய்ய வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 31) செய்தியாளர்களைச் சந்தித்த  அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “நாங்கள் டிக் டாக்கை அமெரிக்காவில் இருந்து தடை செய்கிறோம். அவசரக்கால பொருளாதார சக்தி அல்லது நிர்வாக உத்தரவைப் பயன்படுத்தி சனிக்கிழமைக்குள்  நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் இவ்வாறு அறிவித்துள்ள நிலையில்,   மைக்ரோசாஃப்ட் நிறுவனம், டிக் டாக்கின் அமெரிக்கச் செயல்பாடுகளை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து சீனாவுக்கும், அமெரிக்காவும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் சீனாவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

விஜய் எங்கே?

4 நிமிட வாசிப்பு

விஜய் எங்கே?

அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு! ...

8 நிமிட வாசிப்பு

அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு!

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ...

3 நிமிட வாசிப்பு

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

சனி 1 ஆக 2020