மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஆக 2020

சசிகலா விடுதலை...புதிய தகவல்!

சசிகலா விடுதலை...புதிய தகவல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்ற கேள்வியும் அதை ஒட்டிய தமிழக அரசியல் தட்பவெட்ப மாற்றங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

பாஜகவைச் சேர்ந்த ஆசிர்வாதம் ஆச்சாரி ஆகஸ்ட் 14ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என்று கடந்த மாதம் ட்விட்டரில் பதிவிட்டதில் இருந்து சசிகலாவின் விடுதலை தேதி பற்றிய பரபரப்பு அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில் நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கர்நாடக சிறைத்துறையில் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில்.... சசிகலாவின் விடுதலையில் அவர் செலுத்த வேண்டிய அபராதத் தொகை முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது. அதை செலுத்துவதற்கு சசிகலா தரப்பினர் தீவிரமான வேலைகளில் சட்டரீதியாக ஈடுபட்டுள்ள நிலையில் சசிகலா விடுதலை பற்றிய இன்னொரு தகவலும் கிடைத்துள்ளது.

கொரோனா தொற்று பரவ காரணமாக ஊரடங்கு தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை விதிக்கப்பட்டுள்ள நிலையில்.,. அதற்குள் விடுதலையாக வாய்ப்பு வந்தாலும் அதைத் தள்ளிப் போடுவதற்கும் சசிகலா தரப்பில் முயற்சிகள் நடக்கின்றன.

ஊரடங்கு உத்தரவு போது விடுதலையாகி வந்தால் தன்னுடைய முழுமையான பலத்தை வரவேற்பு நிகழ்ச்சிகளின் மூலம் காட்ட இயலாது என்பதால் சசிகலா இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

அதேநேரம் சசிகலா செப்டம்பர் மாதத்தில் விடுதலையானால் சிறப்பாக இருக்கும் என்று அவரது ஜோதிடர்கள் தகவல் சொல்லி அனுப்பி உள்ளார்கள்.

சசிகலாவை தொடர்ந்து சந்தித்து வருபவர்கள் தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது, "சட்டரீதியாக சசிகலாவை வெளியே கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றன. அனேகமாக செப்டம்பர் 11 அல்லது 14 தேதிகளில் நல்லதொரு முடிவு கிடைக்கலாம்" என்கிறார்கள்.

விஜய் எங்கே?

4 நிமிட வாசிப்பு

விஜய் எங்கே?

அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு! ...

8 நிமிட வாசிப்பு

அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு!

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ...

3 நிமிட வாசிப்பு

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

சனி 1 ஆக 2020