மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

சோனியா காந்திக்கு என்னாச்சு?

சோனியா காந்திக்கு என்னாச்சு?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உடல் நிலை பற்றி டெல்லி கங்காராம் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

ஜூலை 30 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் காணொலி மூலமாக ஒரு கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதில் இளம் உறுப்பினர்கள் மீண்டும் ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். காங்கிரஸ் தலைமையின் தற்போதைய செயல்படும் விதம் குறித்து கபில் சிபல் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சோனியா காந்தி, கூட்டம் முடிந்தபின் உடல் நலக் கோளாறு காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் ஜூலை 30 மாலை சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை மருத்துவமனை வெளியிட்ட செய்தியில், சோனியா காந்தி வழக்கமான பரிசோதனைகளுக்காகவும் மேலும் சில ஆய்வுகளுக்காகவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இப்போது அவரது உடல் நலனில் திருப்திகரமான முன்னேற்றம் தெரிகிறது என்று தெரிவித்துள்ளது.

சோனியாவின் உடல் நிலை குறித்து காங்கிரஸ் தலைவர்களும், மற்ற கட்சித் தலைவர்களும் ஆர்வத்தோடு விசாரித்து வருகின்றனர்.

-வேந்தன்

காங்கிரஸுக்குள் கலகக் குரல்

சனி, 1 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon