மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 31 ஜூலை 2020

அமைச்சருக்கு வேண்டிய கம்பெனி: உரத்தை வாங்க நிர்பந்திக்கும் அதிகாரிகள்! .

அமைச்சருக்கு வேண்டிய கம்பெனி: உரத்தை வாங்க நிர்பந்திக்கும் அதிகாரிகள்! .

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட்டுறவு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டு, 1904இல் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழகத்தில் சென்னை மாகாணத்தில் கூட்டுறவு இயக்கத்தைப் பரப்ப 1932 இல் கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் இயற்றப்பட்டது.

அது கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கம், வேளாண் கூட்டுறவு சங்கங்கள், நிலவள கூட்டுறவுச் சங்கங்கள் எனப் பல விதமாக வளர்ந்து கிராமப்புற விவசாயிகள், தொழிலாளர்கள் அனைவரும் பயன்பட்டுவருகிறார். இப்படிப்பட்ட உன்னதமான வரலாறு கொண்ட கூட்டுறவுத் துறை தற்போது ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கி முறைகேடுகள் அதிகம் நடக்கும் துறையாக மாறிவிட்டது என குற்றம்சாட்டுகிறார்கள் விவசாயிகள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாலமரத்துப்பட்டி விவசாயி சென்னையன் நம்மிடம் பேசியபோது, “சிறு விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக உரம் வாங்க கடன் பெறுவோம். வட்டி குறைவாக இருக்கும். சிரமம் இல்லாமலும் கடன் கிடைக்கும்.

எங்களின் நிலையைத் தெரிந்துகொண்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஊர்ப் பெயர் தெரியாத தரமில்லாத உரத்தை அதிகவிலைக்கு வாங்கச்சொல்லி நிர்பந்தம் செய்கிறார்கள். கேட்டால் இந்த உர நிறுவனம் அமைச்சருக்கு வேண்டப்பட்டது என்கிறார்கள். வேண்டப்பட்ட கம்பெனி உரம் என்றால் மண்ணைக் கொடுத்தாலும் வாங்கிதான் ஆகவேண்டுமா” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த ஜகதீசன் சொல்கிறார், “கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுக்குத் தொடர்புடைய பிளாண்ட்ஜீன் கரிம உர நிறுவனம் ஒன்று திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. இந்த கம்பெனி உரத்தைத் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலமாக அழுத்தம் கொடுத்து ஒவ்வொரு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் 2 முதல் 5 டன் கட்டாயம் வாங்கவேண்டும் என்று மிரட்டித் திணித்துவருகிறார் அமைச்சரின் சிறப்பு உதவியாளரும் முன்னாள் கூட்டுறவுத்துறை பதிவாளருமான ராஜசேகர்.

இந்த உரத்தை எந்த விவசாயிகளும் வாங்கவில்லை, ஆனால் கடன் கேட்கும் விவசாயிகளிடம் கட்டாயமாக வாங்கச் சொல்கிறார்கள். கூட்டுறவுச் சங்கத்தின் அதிகாரிகள் நிர்பந்தித்தாலும் பெரிய அளவில் யாரும் வாங்குவதில்லை. தமிழகம் முழுவதும் கிடங்குகளில் தேங்கிக் கிடக்கிறது” என்று குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ஒருவர் நம்மிடம் பேசியபோது, “வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இருக்கக்கூடிய உரத்திலேயே மிகவும் தரம் குறைந்த உரம் இதுதான். இருப்பதிலியே அதிகமான விலையும் இந்த பிளாண்ட்ஜீன் உரம்தான்.

ஒரு டன் யூரியா ரூ. 5929, டிஏபி ஒரு டன் ரூ. 24 ஆயிரம், எம்.ஒ.பி ஒரு டன் ரூ.7,500, 10.26 காம்ப்ளக்ஸ் ஒரு டன் ரூ 20,500 தான். ஆனால் அமைச்சருக்கு வேண்டியபட்ட பிளாண்ட்ஜீன் உரம் மட்டும் ஒரு டன் 90 ஆயிரம், எங்களால் விவசாயிகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. இந்த உரத்தால் எங்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்சினைதான் வருகிறது. எங்களுக்கு வேறுவழியில்லை திரும்பவும் அனுப்பமுடியாது. அதனால் எப்படியோ நாங்களே பணம் செலுத்திவிடுகிறோம்” என்று சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

விவசாயிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்க கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவை தொடர்புகொண்டோம்...இரு கைப்பேசி எண்களும் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக கணினி குரல் ஒலித்தது. அமைச்சரின் சிறப்பு உதவியாளர் ராஜசேகர் கைப்பேசிக்குத் தொடர்புகொண்டோம். பல முறை நீண்ட நேரம் அழைப்பு சென்றும் யாரும் எடுக்கவில்லை. அமைச்சர் தரப்பு பதிலளித்தால் அதனை வெளியிடுவதற்கும் தயாராக இருக்கிறோம்.

விஜய் எங்கே?

4 நிமிட வாசிப்பு

விஜய் எங்கே?

அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு! ...

8 நிமிட வாசிப்பு

அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு!

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ...

3 நிமிட வாசிப்பு

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

வெள்ளி 31 ஜூலை 2020