மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 31 ஜூலை 2020

ஆகஸ்டு 15... மாசெக்களுக்கு ஸ்டாலின் கெடு!

ஆகஸ்டு 15... மாசெக்களுக்கு ஸ்டாலின் கெடு!

திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலுக்காக முதல் கட்டப் பணிகளைச் செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார் கட்சியின் தலைவர் ஸ்டாலின்.

ஜூலை 30 ஆம் தேதி கூடிய காணொலி மாசெக்கள் கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசுவை ஸ்டாலின் மாசெக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நிர்வாகிகளை பெயர் குறிப்பிட்டு நலம் விசாரித்தவர் பின் கலைஞர் நினைவுநாளை நடத்துவது பற்றி கருத்துகள் கேட்டார்.

அதன் பின் கலைஞர் நினைவு தினத்துக்குரிய பதாகைகள், போஸ்டர்கள், டிசைன்கள் தலைமையிடம் இருந்து அனுப்பி வைக்கப்படும் என்றும் தமிழ்நாடு முழுதும் ஒவ்வொரு கிளையிலும் கலைஞரின் நினைவு நாள் நலத்திட்ட உதவிகளோடு நடத்தப்பட வேண்டும் என்றும் கூறிய ஸ்டாலின்... ‘ஒவ்வொரு கிளையும் எவ்வாறு இதை நடத்தியது என்பதை மாவட்டச் செயலாளர்கள் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்றும் கூறினார்.

அதன் பிறகு மாநிலங்களவை உறுப்பினரும், திமுக சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ இப்போது ஒரு அறிவிப்பு செய்வார், அதை கவனமாகக் கேளுங்கள் என்று கூறினார் ஸ்டாலின். அதைத் தொடர்ந்து என்.ஆர். இளங்கோ பேசுகையில், “ வரும் செப்டம்பர் மாதத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை சேர்க்க, நீக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஏற்கனவே நாம் கேட்டுக்கொண்டபடி ஓவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் திமுக சார்பிலான முகவர் நியமிக்கப்பட வேண்டும். அந்த வாக்குச் சாவடி முகவர்கள்தான், அந்தந்த வாக்குச் சாவடிகளில் யாரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்று கண்காணிக்க வேண்டும். செப்டம்பர் மாதம் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சேர்க்கை, நீக்கம் பணிகளைத் தொடங்கலாம் என்ற நிலையில் ஆகஸ்டு 15 ஆம் தேதிக்குள், மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் இருக்கும் வாக்குச் சாவடி முகவர்கள் பட்டியலை தலைமைக்கு அனுப்ப வேண்டும்” என்று கூறினார் என்.ஆர். இளங்கோ. அவர் பேசி முடித்தவுடன் ஸ்டாலின், ‘அனைவரும் ஆகஸ்டு 15 க்குள் கட்டாயமாக அனுப்பிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

விஜய் எங்கே?

4 நிமிட வாசிப்பு

விஜய் எங்கே?

அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு! ...

8 நிமிட வாசிப்பு

அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு!

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ...

3 நிமிட வாசிப்பு

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

வெள்ளி 31 ஜூலை 2020