மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 31 ஜூலை 2020

மெட்ரோ நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்!

மெட்ரோ நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்!

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயரை வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு தலைவர்கள், முன்னாள் முதல்வர்களின் பெயர்கள் வைக்கப்படுவது வழக்கம். 90 களில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது. சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரும், உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரும் சூட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை சென்டிரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றிற்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 31) வெளியிட்டிருக்கும் அறிவிக்கையில், “சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம்‌ என்று பெயரிட்டதைப்‌ போல்‌, ஆலந்தூர்‌ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அறிஞர்‌ அண்ணா ஆலந்தூர்‌ மெட்ரோ என்றும், சென்னை சென்ட்ரல்‌ ரயில்‌ நிலையத்திற்கு 'புரட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌ எம்‌.ஜி.இராமச்சந்திரன்‌ மத்திய ரயில்‌ நிலையம்‌' என்று பெயர்‌ வைத்ததைப்‌ போல சென்ட்ரல்‌ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சி‌ தலைவர்‌ டாக்டர்‌ எம்‌.ஜி.இராமச்சந்திரன்‌ சென்ட்ரல்‌ மெட்ரோ என்றும்‌ பெயர் சூட்டப்படுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “ஆசியாவில்‌ மிகப்பெரிய பேருந்து முனையமான சென்னை புறநகர்‌ பேருந்து நிலையத்தையும்‌, அங்கு அமைந்துள்ள மெட்ரோ நிலையத்தையும்‌ ஜெயலலிதா திறந்து வைத்ததாலும்‌, சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை நினைவு கூறும்‌ வகையில்‌, புறநகர்‌ பேருந்து நிலைய மெட்ரோ நிலையத்தை புரட்சித்‌ தலைவி டாக்டர்‌ ஜெ.ஜெயலலிதா மெட்ரோ என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளது” என்றும் அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், “2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில், ₹14,000 கோடி செலவில், அன்றைய துணைமுதல்வர், ஸ்டாலின் அவர்களின் முன்முயற்சியால் மட்டுமே கொண்டு வரப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தலைவர் கலைஞர் பெயரை வைக்காமல் இருட்டடிப்பு செய்வது ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எழில்

விஜய் எங்கே?

4 நிமிட வாசிப்பு

விஜய் எங்கே?

அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு! ...

8 நிமிட வாசிப்பு

அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு!

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ...

3 நிமிட வாசிப்பு

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

வெள்ளி 31 ஜூலை 2020