மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

ராதாரவி, ரஜினி சம்பந்திக்கு பாஜகவில் பதவி!

ராதாரவி, ரஜினி சம்பந்திக்கு பாஜகவில் பதவி!

பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக ராதாரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்ற பிறகு புதிய நிர்வாகிகள் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில் திமுகவில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதுபோலவே நடிகைகள் கவுதமி, நமீதா உள்ளிட்டோருக்கும் பதவி வழங்கப்பட்டிருந்தது .

இந்த நிலையில் பாஜக அணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பட்டியலை இரண்டாவது கட்டமாக முருகன் நேற்று (ஜூலை 16) வெளியிட்டார். அதில், திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் பலருக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகர் ராதா ரவிக்கு பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே, நடிகர் தனுஷின் தந்தையும், ரஜினிகாந்தின் சம்பந்தியுமான இயக்குனர் கஸ்தூரி ராஜா மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டுமென அக்கட்சியின் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ரஜினிகாந்தின் உறவினருக்கு பதவி அளித்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ், ஒபிசி பிரிவு மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இயக்குநர் பேரரசு, பெப்சி சிவா, தீனா ஆகியோர் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவுக்கு மாநில செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சந்தன வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு மாநில இளைஞரணி துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

எழில்

வியாழன், 16 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon