மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

இ-பாஸ் வாங்காமல் தூத்துக்குடி சென்றேனா? உதயநிதி

இ-பாஸ் வாங்காமல் தூத்துக்குடி சென்றேனா? உதயநிதி

இ-பாஸ் வாங்காமல் சென்றதாக ஜெயக்குமார் கூறிய குற்றச்சாட்டுக்கு உதயநிதி பதிலளித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் வீட்டுக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 27ஆம் தேதி நேரில் சென்று ஆறுதல் கூறினாா். இருவரின் உயிரிழப்புக்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 29) செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அனுமதி வாங்காமல் தூத்துக்குடி சென்று வந்துள்ளார். இ-பாஸ் வாங்காமல் உதயநிதி தூத்துக்குடி சென்றது சட்டத்தை மீறிய செயலாகும். இது பொதுப் பிரச்சனை என்பதால் இதுகுறித்து அவர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

ஆனால் தான் இ-பாஸ் வாங்கியே தூத்துக்குடி சென்று வந்ததாக உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மெயின் ரோடு செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம். இ-பாஸை காட்டியபிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர்” என்று குறிப்பிட்டார்.

ஆனால், என் சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுவதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

எழில்

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon