^தமிழகத்தில் மின் கட்டணம் குறையுமா?

politics

கேரளாவைப் போல தமிழகத்தில் மின்கட்டணத்தை குறைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இக்காலம் முழுவதும் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்டவை அதிகமாக பயன்படுத்தப்படுவதால் மின் நுகர்வும் அதிகரித்துள்ளது. இன்னொரு பக்கம் வேலை, வருமானம் இல்லாமல் மக்களுடைய வாழ்வாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்த நெருக்கடியான காலத்தில் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து பொதுமக்களுக்கு தாங்க முடியாத சுமையினை அளித்து வருகிறது.

இந்த நிலையில் மின்கட்டணத்தை குறைக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூன் 29) எழுதிய கடிதத்தில், “மின்சார வாரியம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்நுகர்வை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கும் முறையை மேற்கொண்டுள்ளது. இதனால் 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் மின் நுகர்வோர் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கொரோனா காலத்தில் மின்நுகர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ள மின் கட்டணம் என்பது அரசு அறிவித்த நிவாரணத்தொகை ரூ.1000த்தை விட பல மடங்கு கூடுதலாக உள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அங்கீகரித்து கேரள அரசு உள்பட பல மாநில அரசுகள் மின்கட்டணத்தை குறைத்துள்ளன எனவும், எனவே, இதை கணக்கில் கொண்டும், மக்கள் அனுபவிக்கும் நெருக்கடிகளை கணக்கில் கொண்டும் தமிழக அரசு மின் கட்டண உயர்விலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

**கூடுதல் தொகையை அரசு ஏற்க வேண்டும்**

மேலும், “ **கொரோனா காலத்திற்கு முன்பு (2020 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம்) மின்நுகர்வோர் எவ்வளவு தொகையை மின்கட்டணமாக செலுத்தியிருந்தார்காளோ அதே தொகையைதான் கொரோனா காலம் முடியும் வரை வசூலிக்க வேண்டும். அதற்கு மேல் கூடுதலாக உள்ள தொகையை மின்நுகர்வோர்களுக்கு நிவாரணமாக வழங்குகிற முறையில் தமிழக அரசே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.**

ஏற்கனவே மின்கட்டணத்தை மின்நுகர்வோர் செலுத்தியிருந்தால், அவர்கள் செலுத்தியுள்ள கூடுதல் கட்டணத்தை எதிர்கால மின் பயன்பாட்டிற்கான கட்டணத்தில் சரி செய்து கொள்ள வேண்டும், இதனால் தமிழக மின்சார வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தமிழக அரசே ஏற்றுக் கொண்டு ஈடுசெய்ய வேண்டும்” என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *