மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 மே 2020

உருவாகும், ‘தலித் அதிகாரம்’: பின்னணியில் பாஜக!

உருவாகும், ‘தலித் அதிகாரம்’: பின்னணியில் பாஜக!

தமிழக பாஜக தலைவராக எல். முருகன் தலைமையேற்றதில் இருந்தே பல்வேறு கட்சிகளில் இருக்கும் தலித் பிரமுகர்களை பாஜகவுக்குக் கொண்டு வரும் அஜெண்டா அவரிடம் கொடுக்கப்பட்டது. அதன்படி முதலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமியை பாஜகவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் கட்சி ரீதியாக மட்டுமல்லாமல் அதிகாரிகள் ரீதியாகவும் தலித்துகளை மையப்படுத்திய ஓர் ஆபரேஷன் திரைமறைவில் தொடங்கியிருக்கிறது.

மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தலித் பிரமுகர்தான் இந்த தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

"தமிழகத்தில் ஓய்வுபெற்ற பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சேர்ந்து அண்மையில், ‘தலித் அதிகாரம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். இவர்களுக்கென ஒரு வாட்ஸ் அப் குரூப் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அந்த அதிகாரிகள் தத்தமது மாவட்டம், பகுதிகளில் இருக்கும் பட்டியல் சமுதாய இளைஞர்கள், பட்டியல் சமுதாய அரசியல்வாதிகள், பட்டியல் சமுதாய செல்வந்தர்கள் ஆகியோரை சந்தித்து ஒருங்கிணைத்து வருகிறார்கள். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் அமைப்பு ரீதியாகவும் சரி, அந்தக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் போது ஆட்சி ரீதியாகவும் சரி பட்டியல் சமுதாயத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. எனவே திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் தலித்துகள் புறக்கணிக்க வேண்டும்’ என்ற அடிப்படையில் இந்த குழு தொடங்கப்பட்டிருக்கிறது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளில் இருக்கும் பட்டியல் சமுதாய தலைவர்களை பாஜகவுக்குக் கொண்டு வருவதும் இவர்களுக்கான அஜெண்டாவாக இருக்கிறது” என்கிறார் அந்தப் பிரமுகர்.

பட்டியல் சமுதாய அதிகாரிகள் அமைத்திருக்கும் இந்த தலித் அதிகாரம் என்ற குழுவில் முழுக்க முழுக்க ஓய்வுபெற்ற அதிகாரிகளே இருப்பதால் இதன் செயல்பாடு பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

-ஆரா

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

சனி 23 மே 2020