மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 மே 2020

பொது சுகாதாரத்தில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும்: ஹர்ஷவர்தன்

பொது சுகாதாரத்தில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும்: ஹர்ஷவர்தன்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன், 2020-2021-ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (மே 22) காணொலி முறையில் நடைபெற்ற நிர்வாக வாரியத்தின் 147-வது அமர்வில் ஜப்பானின் டாக்டர். ஹிரோகி நகாடானிக்குப் பதிலாக ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டார்.

நிர்வாக வாரியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட டாக்டர். ஹர்ஷவர்தன், கொரோனாவால் உயிரிழந்த லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவிப்பதுடன், அவர்களது கண்ணியம், உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புக்கு தலைவணங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பொறுப்பேற்றுக் கொண்ட பின் பேசிய டாக்டர் ஹர்ஷவர்தன், “ உங்கள் அனைவரது நம்பிக்கையால் நான் பெரிதும் கவுரவிக்கப்பட்டதாக உணர்கிறேன். எங்களுக்கு அளித்துள்ள இந்தக் கவுரவம் குறித்து இந்தியாவும், எனது நாட்டு மக்களும் பெருமித உணர்வு கொள்கின்றனர். கொரோனா பரவல் மனிதகுலத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் சோகம். அடுத்த 20 ஆண்டுகளில் இது போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த அனைத்து சவால்களும் ஒருங்கிணைந்த முயற்சியின் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில், ஒருமித்த அச்சுறுத்தல்களுக்கு ஒன்றுபட்ட பொறுப்பு தேவையாகும். இதற்கு நாடுகளின் ஒருங்கிணைந்த உயர்ந்த லட்சியம் தேவைப்படுகிறது ’’ என்று அவர் கூறினார்.

“நமது சுகாதார முறைகளின் முன்னேற்பாடுகள் மற்றும் வலுப்படுத்துதலைப் புறக்கணித்தால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு இந்தப் பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற உலக அளவிலான நெருக்கடி நிலையில், அபாய மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த உலகக் கூட்டுறவு அவசியமாகும். இதன் மூலம் உலகப் பொது சுகாதாரத்தில் முதலீட்டை அதிகரித்து அதற்கு புத்துயிர் ஊட்ட வேண்டும்’’ என்று அவர் கூறினார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் அனுபவங்களை டாக்டர்.ஹர்ஷவர்தன் பகிர்ந்து கொண்டார். ‘’ இந்தியாவில் இறப்பு விகிதம் 3 சதவீதமாக மட்டுமே உள்ளது. 135 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், ஒரு லட்சம் பேர் மட்டுமே கொவிட்-19-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமானவர்கள் விகிதம் 40 சதவீதத்துக்கும் அதிகமாகும். இருமடங்காகும் விகிதம் 13 நாட்கள்’’ என்று அவர் தெரிவித்தார்.

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

சனி 23 மே 2020