மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 மே 2020

மாசெக்கள்-ஐபேக்: மீண்டும் பஞ்சாயத்து செய்யும் ஸ்டாலின்

மாசெக்கள்-ஐபேக்: மீண்டும் பஞ்சாயத்து செய்யும் ஸ்டாலின்

திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மே 16 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கும் என்ற அறிவிப்பு இன்று காலை வெளியானது. இதையடுத்து நாளை காலை பல இடங்களில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த மாவட்டச் செயலாளர்கள் அவற்றை ஒத்தி வைத்துவிட்டு மாசெக்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

மேலும் கூட்டம் காணொலிக் காட்சி முறையில் நடைபெறுவதால் இன்று மாலையே அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்குமான இணைப்புப் பொறிமுறையை அதற்கான குழுவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

கொரோனா நிவாரணப் பணிகள்தான் கூட்டத்தின் பேசுபொருள் என்பதால் கூட்டத்தில் பரபரப்புப் பஞ்சமிருக்காது என்கிறார்கள் சில மாசெக்கள்.

“கொரோனா நிவாரணப் பணிகளை ஒருமுகப்படுத்துவதற்காக ஐபேக் போட்ட திட்டம்தான் ஒன்றிணைவோம் வா. இத்திட்டத்தின் செயல்பாட்டுக் கோளாறு காரணமாக பல போலியானவர்களும், தேவையற்றவர்களும் இதன் மூலம் உதவிபெறுகிறார்கள். அவர்களுக்கு இனிமேல் எங்களால் செலவு பண்ண முடியாது என்று கணிசமான மாவட்டச் செயலாளர்கள் சொல்லிவிட்டார்கள். அதனால் மே 8 ஆம் தேதி வரைக்கும் வந்த அழைப்புகளுக்கு மட்டும் எங்களை உதவி செய்யச் சொல்லியிருக்கிறார்கள். மே 8 ஆம் தேதிக்குப் பிறகு வந்த அழைப்புகளுக்குரிய நபர்களுக்கு என்னென்ன தேவை என்ற விவரங்களை கலெக்டரிடம் கொடுத்துவிட்டோம். இந்த நிலையில் ஒன்றிணைவோம் வா திட்டத்தை பொதுவாக தொடர்வதா அல்லது பழையபடி மாவட்டச் செயலாளர்களின் நிர்வாகத்திலேயே நிவாரணப் பணிகளை மேற்கொள்வதா என்பது பற்றித்தான் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்கிறார்கள் நம்மிடம் பேசிய சில மாசெக்கள்.

மேலும், “ஏற்கனவே பிப்ரவரி 17 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே, ‘ஐபேக் வருகையால் மாவட்டச் செயலாளர்களின் அதிகாரமும், சுதந்திரமும் எந்த அளவிலும் பாதிக்கப்படாது’ என்று ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். ஆனபோதும் ஐபேக் டீமுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் இப்போது அதிகமாகியிருக்கின்றன. இதைத் தீர்த்து வைக்கத்தான் இந்த கூட்டமே நடத்தப்படுகிறது. ஒரு சில மாசெக்கள் ஐபேக்குக்கு எதிராக நாளை வெடிக்கக் கூடும்” என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

வெள்ளி 15 மே 2020