மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 ஏப் 2020

அரசியலுக்கு வரும் மகன்: உறுதிப்படுத்திய வைகோ

அரசியலுக்கு வரும் மகன்: உறுதிப்படுத்திய வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ, விரைவில் முழு நேர அரசியலுக்கு வரப் போவதற்கான, அறிகுறிகள் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி அவரது பிறந்தநாளிலேயே தெரிந்தன. துரை வைகோவின் பிறந்தநாளில் மின்னம்பலம் வெளியிட்ட செய்தியை 12 நாட்களில், அம்பேத்கரின் பிறந்தநாளில் உறுதிப்படுத்தியிருக்கிறார் வைகோ.

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி, சட்டமன்றத்தை நோக்கி வைகோ மகன் என்ற தலைப்பில் மின்னம்பலம். காம் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், ‘கட்சியின் பெரும்பாலான மாசெக்கள் துரை வையாபுரியைத் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். சமூக தளங்களில் துரைக்கு வாழ்த்து சொல்லி மாசெக்கள் பதிவிட்டதை எல்லாம் வைகோ கூர்ந்து கவனித்து வருகிறார். தன் மகனின் அரசியல் வருகை பற்றி வைகோ இதுவரை கட்சி அளவில் வெளிப்படையாக பேசியதில்லை. ஆனால் திருமண நிகழ்வுகளுக்கு தனக்கு பதிலாக அனுப்பி வைப்பதே ஒரு மெசேஜ்தானே’ என்று அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் தன் மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் இன்று (ஏப்ரல் 14) சில குறிப்புகளை மதிமுகவினருக்குக் கொடுத்திருக்கிறார் வைகோ. அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை ஒட்டி இன்று வைகோ தனது அண்ணாநகர் இல்லத்திலேயே அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா கலந்துகொண்டார். அதோடு வைகோவின் மகன் துரை வைகோவும், தன் தந்தைக்கு அருகிலேயே நிற்கும் புகைப்படங்கள் வைகோவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலேயே வெளியிடப்பட்டிருக்கின்றன. வைகோ தன் மகனை ஓர் அரசியல் ரீதியான நிகழ்வில் தன்னோடு நிற்க வைத்து புகைப்படம் வெளியிடுவது இதுதான் முதல் முறை. (மதிமுகவின் மாநாடுகளில் வைகோவின் குடும்பத்தினர் பங்கேற்பது தனி)

“வைகோ தன் கட்சி நிகழ்ச்சிகளை மிகத் தெளிவாகத் திட்டமிடுவார். வரவேற்புரையில் இருந்து நன்றியுரை வரைக்கும் யார் என்பதை முன்னமே முடிவு செய்திருப்பார். மதிமுகவின் சிறு நிகழ்வில் தொடங்கி பெரும் மாநாடுகள் வரைக்கும் திட்டமிட்டபடியே நடத்துவார். அப்படி துல்லியமாக நிகழ்ச்சி நிரலை முடிவு செய்யும் வைகோ, இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தன்னுடன் மகன் துரை வைகோவை கலந்துகொள்ளச் செய்ததன் மூலம், அவரது அரசியல் வருகையை உறுதிப்படுத்தியிருக்கிறார். அம்பேத்கர் பிறந்த தினம், சித்திரை நாள் என எல்லா வகையிலும் இன்று நல்ல நாள்.” என்கிறார்கள் மதிமுக நிர்வாகிகள்.

-ஆரா

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

செவ்வாய் 14 ஏப் 2020