மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

பொருளாதார நிபுணர்களின் யோசனையைக் கேளுங்கள்: மோடிக்கு ப.சிதம்பரம்

பொருளாதார நிபுணர்களின் யோசனையைக் கேளுங்கள்: மோடிக்கு ப.சிதம்பரம்

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக உள்ளது. 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 3) காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.

பிரதமர் மோடி இவ்வாறு தொலைக்காட்சிகளில் மக்களுக்காக உரையாற்றினார் என்றாலே, எதாவது முக்கிய அறிவிப்பாகத்தான் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? பொருளாதாரத்தைச் சரி செய்ய வேண்டிய அறிவிப்பாக இருக்குமா?, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வேறு எதாவது அறிவிப்பு வெளியாகுமா? என்று பலரும் பலவிதமாக எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், இந்தியாவின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணியிலிருந்து 9 நிமிடங்களுக்கு வீட்டின் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு, விளக்கு அல்லது டார்ச் லைட்டை அடிக்க வேண்டுமென்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

கொரோனாவால் இந்திய மக்கள் அச்சத்தில் இருக்கும் இந்த வேளையில், எதற்காகப் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், பிரதமர் உரையை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

பிரதமரின் உரை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், “உழைக்கும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் மற்றும் தொழிலதிபர்கள் முதல் தினக்கூலிகள் வரை அனைவரும் பொருளாதார சரிவை மீட்டெடுப்பதற்கான வழிகள் குறித்து நீங்கள் அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்த்தனர்” என்று கூறி பிரதமரின் உரை ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஏப்ரல் 5ஆம் தேதி விளக்கேற்றுவதையும், டார்ச் லைட் அடிப்பதையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். பதிலுக்கு, தயவுசெய்து நாங்கள் சொல்வதையும், தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கேளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

-கவிபிரியா

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon