மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

தமிழகம்: ஊரடங்கை மீறிய 8,136 பேர் மீது வழக்கு!

தமிழகம்: ஊரடங்கை மீறிய 8,136 பேர் மீது வழக்கு!

144 தடை உத்தரவை மீறியதற்காக 8,136 பேர் மீது தமிழக காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று (மார்ச் 26) இரண்டாவது நாளை எட்டியுள்ளது. பேருந்து, ஆட்டோக்கள் இயங்காததால் போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது. அவசியமின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

எனினும் தமிழகத்தின் பல நகரங்களில் 144 தடை உத்தரவை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பைக்குகளில் சாதாரணமாக சென்றனர். பல இடங்களில் பைக், காரில் சென்றுகொண்டிருந்தவர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர். இன்னும் சில இடங்களில் லத்தியால் அடித்து விரட்டியடிக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் அவசியமின்றி பைக்கில் சுற்றியவர்களை தோப்புக் கரணம் போடவைத்து அனுப்பினர்.

இந்த சூழலில் 144 தடை உத்தரவை மீறி சென்னை சூளைமேட்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதில், “144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், உயிருக்கு ஆபத்தான தொற்று நோயை பரவச் செய்யும் விதத்தில், கவனமின்றி பொது இடத்தில் கூட்டமாக இருந்துகொண்டு கொரோனா வைரஸ் பரவும் என நன்கு தெரிந்தும் கிரிக்கெட் விளையாடியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட காரணத்திற்காக 8,136 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1,434 வழக்குகளை காவல் துறை பதிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவலை பரப்பியதற்காக 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டு தனிமைப்படுத்துதலை மீறி வெளியே சென்ற காரணத்திற்காக 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 53 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

எழில்

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

வியாழன் 26 மா 2020